புயல் பாதிப்பு எதிரொலி - 2 நாள்களுக்கு பிரசாரங்களை ரத்து செய்தார் மம்தா

ஃபானி புயல் பாதிப்பு எதிரொலியாக, மக்களவைத் தேர்தலுக்கான பிரசார நிகழ்ச்சிகளை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 2 நாள்களுக்கு ஒத்திவைத்துள்ளார். மீட்புப் பணிகளை மேற்பார்வையிட அவர் திட்டமிட்டுள்ளார்.
 | 

புயல் பாதிப்பு எதிரொலி - 2 நாள்களுக்கு பிரசாரங்களை ரத்து செய்தார் மம்தா

ஃபானி புயல் பாதிப்பு எதிரொலியாக, மக்களவைத் தேர்தலுக்கான பிரசார நிகழ்ச்சிகளை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரண்டு நாள்களுக்கு ஒத்திவைத்துள்ளார்.

இதுதொடர்பாக, டுவிட்டரில் மம்தா வெளியிட்டுள்ள பதிவில், “ஃபானி புயலின் மோசமான விளைவுகளைத் தொடர்ந்து, அடுத்த 48 மணி நேரம் எனது பிரசாரக் கூட்டங்கள் அனைத்தையும் ரத்து செய்துள்ளேன். புயல் பாதிப்புகள் குறித்து 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறோம். அனைத்து மக்களும் இத்தருணத்தில் ஒத்துழைப்பை வழங்க வேண்டுகிறேன். அடுத்த இரண்டு நாள்களுக்கு மக்கள் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தின் கடலோரப் பகுதியான கராக்பூரில் தங்கியிருந்து, புயல் மீட்புப் பணிகளை மேற்பார்வையிட மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP