Logo

காஷ்மீரில் முதல்முறையாக தேசியக் கொடி ஏற்றம்

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டத்தொடர்ந்து, ஸ்ரீநகரில் ஆளுநர் சத்யபால் மாலிக் தேசியை கொடியை ஏற்றினார்.
 | 

காஷ்மீரில் முதல்முறையாக தேசியக் கொடி ஏற்றம்

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டத்தொடர்ந்து, அந்த மாநிலத்தின் தலைமை நிர்வாகியாக உள்ள ஆளுநர் சத்யபால் மாலிக் ஸ்ரீநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நம் நாட்டின் மூவர்ணக் கொடியை ஏற்றி சுதந்திர தின நிகழ்வுகளை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து திரும்பப் பெறப்பட்டுது. அதைத்தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் அதற்கான மசோதா  நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இதற்கான உத்தரவில் கையெழுத்திட்டு அதை சட்டமாக பிறப்பித்தார்.

இந்த நிலையில்,  நாட்டின் 73-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, முதல்முறையாக ஜம்மு-காஷ்மீரில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. ஸ்ரீநகரில் உள்ள ஷெரர்-ஏ-காஷ்மீர் மைதானத்தில் நடைபெற்ற விழாவில், ஆளுநர் சத்யபால் மாலிக் நம் நாட்டின் மூவர்ணக் கொடியான தேசியை கொடியை ஏற்றி வைத்தார்.

லடாக்கிலும் சுதந்திர தினக் கொண்டாட்டம் கோலகலமாக நடைபெற்றது. லே நகரில் மாணவர்களின் சாகசங்களுடன் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டதை மக்கள் மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தனர்.

மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தின்கீழ் கொண்ட வரப்பட்டதைத் தொடர்ந்து, முதல் முறையாக கொண்டாடிய சுதந்திர தினம் இது என்று, மகிழ்ச்சியுடன் கூறி இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.

காஷ்மீரில் முதல்முறையாக தேசியக் கொடி ஏற்றம்

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP