பொய்களை உண்மையாக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது: மனோகர் பாரிக்கர்

ரபேல் விவகாரத்தில் கோவா அமைச்சர் ஒருவர் பேசியதாக வெளியாகி இருக்கும் ஆடியோ உண்மைகளை மறைக்க காங்கிரஸ் வெளியிட்ட பொய்யான ஒன்று என்று அம்மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
 | 

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் படுக்கை அறையில் ரஃபேர் போர் விமானக் கொள்முதல் குறித்த ஆவணங்கள் இருப்பதாகக் கோவா அமைச்சர் ஒருவர் பேசிய ஆடியோ வெளியான விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி இருந்தது. 

இதுகுறித்து பதில் அளித்துள்ள கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், "பொய்யான ஒன்றை ஜோடிக்கவே காங்கிரஸ் ஆடியோவை வெளியிட்டு இருக்கிறது. அந்த கட்சி கூறிய பொய்கள் அனைத்தும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் வெட்டவெளிக்கு வந்துள்ளது. அமைச்சர்கள் கூட்டத்தின் போது அப்படி ஒரு விவாதம் நடைபெறவே இல்லை" என்று ட்விட்டில் பதிவிட்டுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP