டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்கும்- ஜே.பி நட்டா நம்பிக்கை

டெல்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி நகைப்புக்குரிய வகையில் ஆட்சியை நடத்தி வருவதாக பாஜகவின் தேசிய செயல் தலைவர் ஜேபி நட்டா கருத்து தெரிவித்துள்ளார்.
 | 

டெல்லியில் பாஜக செயல் வீரர்களின் இரண்டாவது நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஜேபி நட்டா, டெல்லியில் ஆட்சி நடத்தும் ஆத் ஆத்மி கட்சியின் ஆட்சி நகைப்புரிய வகையில் உள்ளது என்றும் அடுத்த வருடம் நடைபெற உள்ள டெல்லி சட்டசபைக்கான தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் டெல்லியில் ஆட்சி நடத்தும் கட்சி திறமையான நிர்வாகத்தை கொடுக்கும் படியாக இருக்க வேண்டும். ஆனால் தற்போது ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி மக்களின் எதிர்ப்பார்புகளை நிறைவேற்றத் தவறி விட்டது.

மக்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த கட்சி மீது மிகுந்த அதிருப்தியில் உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள டெல்ல சட்டசபைக்கான தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும், அதற்காக பாஜக வினர் கடுமையாக உழைக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா கருத்து தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP