Logo

குடிநீரை ஆர்.ஓ செய்வதற்கான தடை உத்தரவு நீட்டிப்பு!!!

டெல்லி பகுதிகளில், 500 லிட்டருக்கும் குறைவான கரைந்த திடப்பொருட்களுடன் (டி.டி.எஸ்) செயல்படுத்தப்படும் ஆர்.ஓ. வடிப்பான்களை பயன்படுத்துவதற்கான தேசிய பசுமை தீர்ப்பாய உத்திரவில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருக்கிறது.
 | 

குடிநீரை ஆர்.ஓ செய்வதற்கான தடை உத்தரவு நீட்டிப்பு!!!

டெல்லியில், 500 லிட்டருக்கும் குறைவான கரைந்த திடப்பொருட்களுடன் (டி.டி.எஸ்) செயல்படுத்தப்படும் ஆர்.ஓ. வடிப்பான்களை பயன்படுத்துவதற்கான தேசிய பசுமை தீர்ப்பாய உத்திரவில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருக்கிறது.

இந்த ஆண்டின் மே மாத தொடக்கத்தில், ஆர்.ஓ வடிப்பான்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதற்கான விதிமுறைகளை வகிக்கும்படி, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அறிவுறுத்தியிருந்தது தேசிய பசுமை தீர்ப்பாயம். மேலும், கரைந்த திடப்பொருட்களுடன் கூடிய தண்ணீரில் லிட்டருக்கு 500க்கும் குறைவாக உள்ள இடங்களில் ஆர்.ஓ வடிப்பான்களை பயன்படுத்த கூடாது என்ற தடை உத்தரவும் பிறப்பித்திருந்தது. 

இதை தொடர்ந்து, ஆர்.ஓ அமைப்பின் தற்போதைய  நிலவரப்படி, வடிப்பான்களின் பயன்பாட்டால், 80 சதவீத நீர் வீணாகும் நிலையில், இனி வரும் நாட்களில், ஆர்.ஓ வடிப்பான்கள் பயன்படுத்துதலில், 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட நீர் மீட்கப்படுகிறதா என்ற கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தது தேசிய பசுமை தீர்ப்பாயம்.

இதனிடையில், கடந்த 4ஆம் தேதி, தங்களது உத்தரவுகளும், அறிவுறுத்தல்களும், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் செயல்முறை படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஆர்.ஓ நிறுவனம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் இரண்டுமே தங்களது அறிவுறுத்தல்களை வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் செயல்முறை படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

இதனை தொடர்ந்து, என்.ஜி.டியின் இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது ஆர்.ஓ நிறுவனத்தின் பிரதிநிதியான இந்திய நீர் தர சங்கம்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று இதற்கான விசாரணையில் ஈடுபட்டிருந்த உச்ச நீதிமன்ற நீதிமதிகள் ஆர்.எஃப். நரிமான் மற்றும் எஸ். ரவீந்திர பட் இருவரும், ஆர்.ஓ நிறுவனத்தின் செயல்முறைகளை பரிசீலிக்குமாறு மத்திய அரசிற்கு உத்தரவு பிறப்பித்தனர். மேலும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அறிவுறுத்தல்களை, ஆர்.ஓ நிறுவனம் நிறுவனம் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது உச்ச நீதிமன்றம்.

ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் என்னும் செயல்முறை மூலம் நீரில் உள்ள அனைத்து கனிமங்களும் பிரித்தெடுக்கப்படும். இத்தகைய நீரை அருந்துவது உடல் நலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாகும். இந்த செயல்முறை பின்பற்றபடக் கூடாது என உலக நாடுகள் பலவற்றிலும் இதற்கு தடை விதிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இதன் அச்சுறுத்தல்களை மனதில் கொண்டு தேசிய பசுமை தீர்ப்பாயம் இதற்கு தடை விதிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP