காமிக் உலகின் பிதாமகன்: ஸ்டான் லீ காலமானார்

மார்வல் காமிக்ஸ் ஜாம்பவானும் ஸ்பைடர் மேன், எக்ஸ் மென், பிளாக் பாந்தெர் மற்றும் பல கேரக்டர்கள் உருவாவதற்கு காரணமான ஸ்டான் லீ தனது 95 வயதில் அமெரிக்காவில் காலமானார். சமீப காலமாக அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
 | 

காமிக் உலகின் பிதாமகன்: ஸ்டான் லீ காலமானார்

மார்வல் காமிக்ஸ் ஜாம்பவானும் ஸ்பைடர் மேன், எக்ஸ் மென், பிளாக் பாந்தெர் மற்றும் பல கேரக்டர்கள் உருவாவதற்கு காரணமான ஸ்டான் லீ அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காலமானார். 

காமிக் கலாச்சாரத்தின் பிதாமகனாக கருதப்படும் ஸ்டான் லீ சமீப காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இவர் 1922ம் ஆண்டு நியூயார்க்கில் பிறந்தார். 1939ம் ஆண்டு ’டைம்லி காமிக்ஸ்’ என்ற நிறுவனத்தில் ஆபிஸ் பாயாக வேலைக்கு சேர்ந்தார் ஸ்டான் லீ. ஸ்டான் லீயின் கடின உழைப்பை கண்ட நிறுவன அதிகாரிகள் அவரது 19வது வயதில் சிறு காமிக்ஸ் கதையை எழுதும் வாய்ப்பை அவருக்கு அளித்தனர். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட ஸ்டான் லீ பின்னர் பல காமிக்ஸ்களை எழுதினார்.

அவர் உருவாக்கிய கதாபாத்திரங்கள் உலகளவில் பலரது பிடித்தமான கதாபாத்திரங்களாக உள்ளன. மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரங்கள் திரைப்படங்களாக உருவான பிறகு ஒவ்வொரு திரைப்படங்களில் ஒவ்வொரு படத்திலும் ஒரு சிறிய காட்சியில் தலைகாட்டிவிடுவார் ஸ்டான் லீ.

கடைசியாக வெளியான Venom திரைப்படத்தில் கூட ஒரு காட்சியில் நடித்திருந்தார். 95 வயாதாகும் ஸ்டான் லீயின் மரணம் காமிக்ஸ் ரசிகர்கள் மட்டுமின்றி ஹாலிவுட் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர் தற்போது உருவாகி வரும் அவெஞ்சர்ஸ் 4 படத்திலும் ஒரு காட்சியில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP