ஊவா மாகாண முதலமைச்சர் பதவி விலகினார்!

ஊவா மாகாண முதலமைச்சர் பதவி விலகினார்!
 | 

ஊவா மாகாண முதலமைச்சர் பதவி விலகினார்!


தமிழ் பெண் பள்ளி முதல்வரின் குற்றச்சாட்டு மற்றும் அது தொடர்பான நெருக்கடிகளை தொடர்ந்து, தாம் உடனடியாகப் பதவி விலகுவதாக ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் அறிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள ஊவா மாகாண முதலமைச்சரான சமார சம்பத் தஸநாயக்க, அவரது இல்லத்திற்கு தன்னை அழைத்து அச்சுறுத்தியதோடு, முழந்தாழிட்டு மன்னிப்பும் கோர வைத்ததாக பதுளை மகளிர் தமிழ் பாடசாலை முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார்.

மாணவி ஒருவரை பாடசாலையில் அனுமதிக்குமாறு, முதலமைச்சர் சாமர சம்பத் கூறியிருந்தார். இந்நிலையில், கல்வி அதிகாரிகளின் ஆணைக்கு மட்டுமே தன்னால் கட்டுப்பட முடியும் என கூறிய பள்ளி முதல்வர், சாமர சம்பத்தின் கோரிக்கையையும் நிராகரித்துள்ளார். 

இந்த நிலையில் குறித்த பள்ளி முதல்வரை முதலமைச்சர் சாமர சம்பத், அச்சுறுத்தியதாக  குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் பள்ளி முதல்வரின் குற்றச்சாட்டை மறுத்துள்ள முதலமைச்சர், தன் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகள் நிறைவு பெறும் வரை தாம் முதலமைச்சர் பதவியை மீண்டும் பொறுப்பேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

இதையடுத்து ஆளும் கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சி, பள்ளி முதல்வரின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்யும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

தமிழ் பெண்கள் பள்ளி முதல்வரை மண்டியிடச் செய்த ஊவா மாகாண முதலமைச்சர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நாடளாவிய ரீதியில் ஆசிரியர்கள் மற்றும்  பள்ளி முதல்வர்கள் அனைவரும் வேலை நிறுத்தத்தில் இறங்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP