Logo

இலங்கை நாடாளுமன்றம் முடக்கம்: சிறிசேனா அதிரடி அறிவிப்பு!

இலங்கை அரசியலில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தை முடக்குவதாக அதிபர் மைத்திரிபால சிறிசேனா அறிவித்துள்ளார். வருகிற நவம்பர் 16 வரை நாடாளுமன்றம் இயங்காது என அவர் அறிவித்துள்ளார்.
 | 

இலங்கை நாடாளுமன்றம் முடக்கம்: சிறிசேனா அதிரடி அறிவிப்பு!

இலங்கை அரசியலில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தை முடக்குவதாக அதிபர் மைத்திரிபால சிறிசேனா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

இலங்கையில் அதிபர் சிறிசேனா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி, ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சிக்கு அளித்த வந்த ஆதரவை திடீரென வாபஸ் பெற்றதையடுத்து, இலங்கையின் புதிய பிரதமராக ராஜபக்சே அதிரடியாக பதவியேற்றுள்ளார். 

தற்போது ராஜபக்சே- சிறிசேனா கூட்டணி இணைந்து 95 உறுப்பினர்கள் வைத்துள்ள நிலையில், ரணிலின் ஐக்கிய தேசிய மக்கள் கட்சிக்கு 106 இடங்கள் உள்ளன. பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை. இந்நிலையில் ரணில் விக்ரமசிங்கே, தான் பிரதமராக பதவியை தொடர்வேன் என்றும், தன்னை நீக்க அதிபருக்கு எந்த அதிகாரமுமில்லை என்றும் தெரிவித்தார். 

தொடர்ந்து நாளையே நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்றும் அதிபருக்கு இன்று கோரிக்கை வைத்தார். 7 உறுப்பினர்களை கொண்டுள்ள இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.  இதனால் அரசியல் சூழலில் பிரச்னைகள் வரும் என்று கருதிய சிறிசேனா, நாடாளுமன்றத்தை முடக்குவதாக இன்று அறிவித்தார். வருகிற நவம்பர் 16 வரை நாடாளுமன்றம் இயங்காது என அவர் அறிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP