Logo

மத்திய வங்கி நிதி மோசடி குறித்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல்!

மத்திய வங்கி நிதி மோசடி குறித்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல்!
 | 

மத்திய வங்கி நிதி மோசடி குறித்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல்!


இலங்கை மத்திய வங்கி நிதி மோசடி குறித்த அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற மத்திய வங்கி ஊழல் மோசடி குறித்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என்று  ஜனாதிபதி அறிவித்தார். ஆனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறித்த அறிக்கை மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில், கடந்த நதடாளுமன்றக் கூட்டம் கூட்டப்பட்ட போது மத்திய வங்கி நிதி மோசடி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த வாரம் தான் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடியும் என ஜனாதிபதி சபாநாயகர் மூலம் அறிவித்திருந்தார். இதன் காரணமாக  கூட்டு எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதோடு மோதல்களிலும் ஈடுபட்டனர். இதையடுத்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்­பினர் ஷெஹான் சேம­சிங்க,  "மத்­திய வங்­கியில் இடம்­பெற்­றுள்ள  நிதி மோச­டியை மூடி மறைப்­ப­தற்கு ஜனா­தி­பதி  ஆணைக் குழு  அறிக்கையை ஐக்­கிய தேசியக் கட்சி பயன்­ப­டுத்­த­வுள்­ளது.  அதற்­கா­கவே  அ­றிக்கை  நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகின்றது "  என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP