இலங்கையின் பிரதமராக ரணிலை நியமிக்க முடியாது: அதிபர் சிறிசேன திட்டவட்டம்

இலங்கை நாடாளுமன்ற அவையில் ரணிலுக்கு பெரும்பான்மை இருப்பதால் அவரே மீண்டும் பிரதமராக வருவார் என்று எதிர்பார்த்த நிலையில், இலங்கையின் அடுத்த பிரதமராக ரணில் விக்ரமசிங்கேவை நியமிக்க முடியாது என அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார்.
 | 

இலங்கையின் பிரதமராக ரணிலை நியமிக்க முடியாது: அதிபர் சிறிசேன திட்டவட்டம்

இலங்கையின் அடுத்த பிரதமராக ரணில் விக்ரமசிங்கேவை நியமிக்க முடியாது என அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்ததையடுத்து, நேற்று நாடாளுமன்றம் கூடியது.அதில், ராஜபக்சேவுக்கு எதிராக ரணில் விக்ரமசிங்கே கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். 

இந்த நிலையில்இன்று மீண்டும் நாடாளுமன்றம் கூடிய நிலையில், ரணில் மற்றும் ராஜபக்சே கட்சி எம்.பிகளுக்கு இடையே கடும் மோதல் நிலவியது. இலங்கை நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச தரப்பினர் தங்கள் மீது மிளகாய்ப் பொடி வீசியும், தண்ணீர்ப் பாட்டில்கள் வீசியும் தாக்கியதாக ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் குற்றஞ்சாட்டியுள்ளார். 

இந்நிலையில் நேற்று, 'இலங்கை நாடாளுமன்ற அவையில் ரணிலுக்கு பெரும்பான்மை இருப்பதாகவும்,அவரே மீண்டும் பிரதமராக வர வேண்டும் என சபாநாயகார் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், இந்த விவகாரம் குறித்து அதிபர் சிறிசேன தரப்பில், 'கண்டிப்பாக ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் அடுத்த பிரதமராக நியமிக்கப்பட மாட்டார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் இலங்கை அரசியலில் குழப்பம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP