சீனாவின் சிப்பாயான ராஜபக்சே... இந்தியாவை சீண்டும் அதிரடி பின்னணி!

தெற்காசியாவில் இந்திய – அமெரிக்கக் கூட்டணிக்கு எதிராகச் சீனா நடத்தும் ஆதிக்க அரசியல் சதுரங்க போட்டியில் ராஜபக்சேவை சிப்பாயாக்கி சீனா தற்போது தனது காய்களை வெற்றிகரமாக நகர்த்தியுள்ளது.
 | 

சீனாவின் சிப்பாயான ராஜபக்சே... இந்தியாவை சீண்டும் அதிரடி பின்னணி!

உறுதியற்ற அரசியல் தன்மையால் இலங்கை நிலைகுலைந்துள்ளது. ரணிலுக்கும்- ராஜபக்சேவுக்குமான இடையிலான அதிகாரப் போட்டியே இதற்குக் காரணம் என மேம்போக்காக எடுத்துக் கொள்ளக் கூடாது.   தெற்காசியாவில் இந்திய – அமெரிக்கக் கூட்டணிக்கு எதிராகச் சீனா நடத்தும் ஆதிக்க அரசியல் சதுரங்க போட்டியில் ராஜபக்சேவை சிப்பாயாக்கி சீனா தற்போது தனது காய்களை வெற்றிகரமாக நகர்த்தியுள்ளது.

இந்திய அமைதிப் படை இலங்கையை விட்டு வெளியேறிய பின், இலங்கை அரசு, சீனாவுடன் கொண்டிருந்த உறவை புதுப்பித்துக்கொண்டது. இதனைப் பயன்படுத்தி சீனா, இலங்கையில் படிப்படியாக, அதேவேளை அழுத்தமாக கால் ஊன்றத் தொடங்கியது. 1993-ல் இலங்கையிலுள்ள கல்லே நகரத்தில் கப்பற்படைத் தளத்தில் சீனாவைச் சேர்ந்த ‘நோரிங்கோ’ நிறுவனம் பிரமாண்டமான ஆயுத கிடங்கைத் திறக்க கையெழுத்தானது. அதன்படி இலங்கை அரசு தனக்குத் தேவையான அனைத்து ராணுவத் தளவாடங்களையும் இந்தக் கிடங்கைத் தவிர வேறு யாரிடமும் வாங்கக் கூடாது என்பதும் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம்.

சீனாவின் சிப்பாயான ராஜபக்சே... இந்தியாவை சீண்டும் அதிரடி பின்னணி!

சீனாவின் ஆதரவு நாடான ஈரானை நட்பு நாடாக்கிக் கொள்ள முயன்ற அந்த நாட்டுக்குச் சில சலுகைளுடன் சபுகஸ்கந்தா என்ற பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையம் இலங்கையில் அமைக்க அனுமதிக்கப்பட்டது. அதேபோல், இலங்கையில்உள்ள உமா ஆற்றில் 100 மெகாவாட் திறனுக்கான நீர் மின் நிலையம் அமைப்பதற்கும் ஈரானுக்கு அனுமதி வழங்கியது. எதிர்காலத்தில் இந்தியா, இலங்கைக்கு எதிராகத் திரும்பும் நிலை உருவானால் ஈரான் தனக்கு உதவிக்கரம் நீட்டும் என்ற எதிர்பார்ப்புடன் இலங்கை இத்திட்டங்களுக்கு இடமளித்ததாகக் கூறப்படுகிறது.
இலங்கை கடற்கரையிலுள்ள அம்பாந்தோட்டை நகரை ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் துறைமுக நகராக உருவாக்கிடவும் சீனாவுக்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. விரைவில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றைச் சேமித்து வைக்கும் கண்டெய்னர் துறைமுகம், எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிற்சாலை, விமான நிலையம் ஆகிய வசதிகள் நிறைவேற்றப்பட உள்ளன.

சீனாவின் சிப்பாயான ராஜபக்சே... இந்தியாவை சீண்டும் அதிரடி பின்னணி!

அதேபோல் 2008 ஏப்ரல் மாதத்தில் இருந்து தூத்துக்குடி- கொழும்பை இணைக்கும் கடலடி கேபிளையும் சீனா கைப்பற்றியது. இந்தியாவின் தொலைபேசி, இணைய வசதியை உலகத்தோடு இணைப்பதில் கடலடிக் கேபிள் முக்கியப் பயன்பாட்டில் உள்ளது. டாடா நிறுவனம், ரிலையன்ஸ்  நிறுவனத்தின் ஃபிளாக், ஏர்டெல்லுக்கு சொந்தமான சிங்டெல் ஆகியவற்றின் 121 கம்பி வடங்களும் இந்தப் பணியைச் செய்து வருகின்றன. இத்துறையில் தனியாரைப் போலவே பிஎஸ்என்எல்லும் 2006ல் இலங்கை டெலிகாம் நிறுவனத்துடன் சேர்ந்து 306 கிமீ நீளமுள்ள கடலடியில் செல்லும் கம்பி வடச் சேவையை தூத்துக்குடிக்கும் கொழும்புவுக்கும் இடையில் நிறுவியது.

சீனாவின் சிப்பாயான ராஜபக்சே... இந்தியாவை சீண்டும் அதிரடி பின்னணி!

ஜப்பானின் தனியார் நிறுவனம் ஒன்றும் 180 கோடி ரூபாய் செலவில் கம்பி வடச் சேவையை 2006 அக்டோபர் முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.இப்போது இந்தக்கம்பி வடச் சேவை சீன உளவாளி என்று சந்தேகிக்கப்படும் ஆனந்தகிருஷ்ணன் என்ற மலேஷியத் தொழிலதிபரின் நிறுவனத்திடம் சிக்கியிருக்கிறது. இதன் மூலம் இந்தியாவிலிருந்து பிஎஸ்என்எல் மூலம் வெளிநாடுகளுக்குச் செல்லும் தொலைபேசி மற்றும் இணையதள மின்னஞ்சல் தகவல்களை ஒட்டுக் கேட்டு, பதிவு செய்ய சீன உளவு நிறுவனங்களால் முடியும்.

அதேவளை,இலங்கையில் இந்திய தொழிலதிபர்களின் மூலதனம் இல்லாமல் இல்லை. 25 இந்திய நிறுவனங்களின் 1500 லட்சம் டாலர்கள் இலங்கையில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால், இலங்கையில் சீனாவின் முதலீட்டை ஒப்பிடும்போது குறைவு. இலங்கையில் சீனாவின் நேரடி முதலீடே ஆயிரம் கோடி டாலர்களுக்கு மேல் அதிகம். சீனா மறைமுகமாக தன்னைச் சார்ந்துள்ள ஹாங்காங், மலேஷியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளின் வழியாகவும் பல கோடி டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் கொழும்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் ’ஷங்காய்’ எனும் ஹோட்டல் கட்டப்படுகிறது. அதன் நிர்வாகம் அனைத்தும் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

சீனாவின் சிப்பாயான ராஜபக்சே... இந்தியாவை சீண்டும் அதிரடி பின்னணி!

கொழும்பில் மிக உயரமான ஒரு தாமரை வடிவில் டவர் கட்டப்பட்டுள்ளது. தாமரை, இராஜபக்சே கட்சியின் சின்னம். இதைக் கட்டிக் கொடுத்ததும் சீனா. கொழும்பில் இப்போது இருக்கும் பெரிய பெரிய கட்டிடங்கள் எல்லாம் போருக்கு பின்னாள் சீனா கட்டி கொடுத்தது. கொழும்பு வீதிகளில் உள்ள பெயர் பலகைகளில் சீன எழுத்துக்கள் ஆக்கிரமித்து இருக்கின்றன. அதேபோல் முல்லிவாய்க்காலில் பிரபாகரன் உடல் கண்டெடுக்கப்பட்டதாக சொல்லும் நந்திக் கடலில் மீன் பிடி ஆய்வு செய்ய சீன அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. இப்படி இலங்கையை, சீனா முழுக்க தன் கைக்குள் வைத்திருக்கிறது. இலங்கையில் சீனாவின் ஆதீக்கத்தை தடுக்க திட்டமிட்ட இந்தியா, 2015ல் ராஜபக்சேவை அதிகாரத்திலிருந்து நீக்க, ரணிலையும், சிறிசேனாவையும் ஒன்றிணைத்து ஆட்சியைக் கைப்பற்ற வைத்தது. ஆனால், அதன் பிறகு இலங்கை விஷயத்தை மேம்போக்காக விட்டுவிட்டது இந்தியா.

சீனாவின் சிப்பாயான ராஜபக்சே... இந்தியாவை சீண்டும் அதிரடி பின்னணி!

 தற்போது பதவி நீக்கம் செய்யப்பட்ட ரணில் இந்திய - அமெரிக்க ஆதரவு அணியாகவும், எதிர்த் தரப்பில் சீன ஆதரவு அணியாக சிறிசேனாவும் ராஜபக்சேவும் உள்ளனர். ராஜபக்சே பிரதமரானது இந்தியாவுக்கு பின்னடவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. காரணம்,  ராஜபக்சே தலைமையிலான இலங்கை சுதந்திரா கட்சியினர் இலங்கை முழுவதும் இந்திய எதிர்ப்பைப் பரப்புரை செய்துகொண்டே சீனத்துக்குச் சிவப்பு கம்பளம் விரிக்கின்றனர். இதனால், சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் மேலும் வலுப்பட்டு இந்தியாவின் செல்வாக்கு சரியும் நிலை உருவாகும்.

newstm.in
source: Times of India
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP