Logo

'அரசாங்கத்தை வீழ்த்த என்னுடன் சேருங்கள்'- ராஜபக்சே

'அரசாங்கத்தை வீழ்த்த என்னுடன் சேருங்கள்'- மகிந்த
 | 

'அரசாங்கத்தை வீழ்த்த என்னுடன் சேருங்கள்'- ராஜபக்சே


இலங்கையின் நல்லாட்சி அரசாங்கத்தை வீழ்த்தும் போராட்டத்திற்கு தலைமை தாங்க தயார் என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே அறிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ளுராட்சி தேர்தல், வரும் பிப்­ர­வரி மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இரண்டரை வருடங்களுக்கும் மேலாக ஒத்திவைக்கப்பட்டுவந்த இந்த தேர்தல், ஒரு பொதுத் தேர்தலுக்குரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பரப்புரைகளில் மூழ்கியுள்ளது. இந்த தேர்தல் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மக்கள் சந்திப்பு ஹோமாகமை பிரதேசத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே, அரசியல் அமைப்பின் மூலம் நாட்டினை துண்டாடும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அனைவரும் தம்முடன் கைகோர்க்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். 

 அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

"ஜனாதிபதி தேர்தலில் நான் தோற்க வில்லை. சர்வதேச சக்திகளால் தோற்கடிக்கப்பட்டேன். இன்றும் எனக்கே மக்கள் செல்வாக்கு உள்ளது. நாம் வென்று கொடுத்த சுதந்திரத்தை இந்த மூன்று ஆண்டுகளில் அரசாங்கம் நாசமாக்கியுள்ளது. நாம் முன்னெடுத்த அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அனைத்துமே கைவிடப்பட்டுள்ளன. சர்வதேச நாடுகளுக்கு நிலங்களை விற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கு எமது வளங்களை வழங்கியும் அதில் வரும் பணத்திலேயே அரசாங்கம் தனது செலவுகளை பார்த்துக்கொள்கின்றது.

நாம் மோசடிகளை செய்தோம், களவுகளை செய்தோம், மக்களின் சொத்துக்களை சூறையாடினோம் என கூறி ஆட்சிக்கு வந்த நபர்கள், எம்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் குறித்து எந்தவொரு ஆதாரத்தையும் வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வருகின்றனர். மாறாக இவர்கள் பட்டப்பகலில் கொள்ளையடித்து வருகின்றனர்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்தில் மத்திய வங்கியில் கொள்ளையடித்தனர். இன்றுவரையில் குற்றவாளிக்கு தண்டனை வழங்கவில்லை. ஜனாதிபதி குற்றவாளியை தண்டிக்க விசாரணை நடத்தினால் பிரதமர் அதனை தடுக்கின்றார். உண்மையான குற்றவாளிகள் யார் என்பது இன்று மக்களுக்கு தெரிந்துள்ளது. எம்மை குற்றவாளிகள் என கூறி எம்மை பழிவாங்க நினைக்கும் நபர்களே உண்மையான குற்றவாளிகள். ஆகவே இவர்களை வீழ்த்தும் போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும்" என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP