Logo

டக்ளஸ் தேவானந்தா கொலை முயற்சி வழக்கு- யாழ்.பெண்ணுக்கு 2 ஆண்டு சிறை!

டக்ளஸ் தேவானந்தா கொலை முயற்சி வழக்கு- யாழ்.பெண்ணுக்கு 2 ஆண்டு சிறை!
 | 

டக்ளஸ் தேவானந்தா கொலை முயற்சி வழக்கு- யாழ்.பெண்ணுக்கு 2 ஆண்டு சிறை!


இலங்கையின் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை படுகொலை செய்ய முயன்ற விடுதலைப் புலிகளின் பெண் தற்கொலைக் குண்டுதாரிக்கு உதவியதாக பெண் ஒருவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி, இலங்கையின் முன்னாள் அமைச்சரும் ஈ.பி.டி.பி கட்சி தலைவருமான டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் நடத்துவதற்காக சென்ற விடுதலைப்புலிகளின் பெண் தற்கொலை குண்டுதாரி ஒருவர், போலீஸாரின் சோதனையின் போது, குண்டை வெடிக்க வைத்து மரணம் அடைந்தார்.

இந்த சம்பவத்தில் 5 போலீஸார் கொல்லப்பட்டனர். தற்கொலைக் குண்டுதாரிக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த செல்வகுமார் சத்தியலீலா என்ற மூன்று பிள்ளைகளின் தாயார் கைது செய்யப்பட்டு கடந்த 14 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், கொழும்பு மேல் நீதிமன்றில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவர் மீதான வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இந்த வழக்கில் செ.சத்தியலீலாவதி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட பெண் தண்டனையை அனுபவிக்க வேண்டிய காலத்துக்கும் அதிகமாக சிறையில் இருந்த காரணத்திற்காக 15 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனையை குறைத்து 2 ஆண்டு சிறைத்தண்டனையையும், 25000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளது நீதி மன்றம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP