சோமாலியா- தற்கொலைப்படை தாக்குதல் 6 பேர் பலி

சோமாலியா தலைநகர் மொகடிஷு நகரில் தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் மீது அல் ஷபாப் பயங்கரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர்.
 | 

சோமாலியா- தற்கொலைப்படை தாக்குதல் 6 பேர் பலி

சோமாலிய தலைநகரில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதல் 6 பேர் பலியாகி உள்ளனர். 

சோமாலியா தலைநகர் மொகடிஷு நகரில் தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் மீது அல் ஷபாப் பயங்கரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். 

அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக சோமாலியா நாட்டில் இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
 
அவ்வகையில், சோமாலியா தலைநகர் மொகடிஷு நகரில் பொதுப்பணித்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் அலுவலகத்தின் மீது அல் ஷபாப் பயங்கரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில், தொழிலாளர் நலத்துறை துணை அமைச்சர் சக்கர் இபுராஹிம் அப்தல்லா உள்பட 6 பேர் உயிரிழந்தனர். 

பலத்த காயங்களுடன் பத்துக்கும் அதிகமானவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP