எகிப்தில் ரயில்கள் மோதல்: 15 பேர் பலி

எகிப்தில் பயணிகள் ரயிலுடன் சரக்கு ரயில் ஒன்று மோதியதில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் வரையில் காயமடைந்தனர்.
 | 

எகிப்தில் ரயில்கள் மோதல்: 15 பேர் பலி

எகிப்தில் ரயில்கள் மோதல்: 15 பேர் பலி

எகிப்தில் பயணிகள் ரயிலுடன் சரக்கு ரயில் ஒன்று மோதியதில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் வரையில் காயமடைந்தனர்.

நேற்று(பிப்.28) எகிப்து வடக்குப் பகுதியைச் சேர்ந்த பெஹீரா பகுதியில், கோம் ஹமடா என்ற இடத்திற்கு அருகே உள்ள ரயில் நிலையத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. பயணிகள் ரயிலில் இரண்டு பெட்டிகள் ரயிலில் இருந்து கழன்று மற்றொரு சரக்கு ரயிலுடன் மோதியுள்ளது.

இந்த விபத்தில் 15 பேர் பலியாகினர். சுமார் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து தகவல் எதுவும் வெளிவரவில்லை. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில், இதேபோன்று எகிப்தில் ஏற்பட்ட இரண்டு ரயில்கள் மோதியதில் 41 பேர் பலியாகினர், 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP