Logo

சிரியாவில் 2 வாரங்களில் 1000 பேர் பலி

கிழக்கு சிரியாவில் கடந்த 2 வாரங்களில் நடைபெற்ற தாக்குதல்களில் 1000 பேர் கொல்லப்பட்டதாக எல்லை தாண்டிய மருத்துவர்கள் அமைப்பு (MSF) தெரிவித்துள்ளது.
 | 

சிரியாவில் 2 வாரங்களில் 1000 பேர் பலி

சிரியாவில் 2 வாரங்களில் 1000 பேர் பலி கிழக்கு சிரியாவில் கடந்த 2 வாரங்களில் நடைபெற்ற தாக்குதல்களில் 1000 பேர் கொல்லப்பட்டதாக  எல்லை தாண்டிய மருத்துவர்கள் அமைப்பு (MSF) தெரிவித்துள்ளது.

கிழக்கு சிரியாவில் உள்ள கூட்டா பகுதியில் கடந்த இரண்டு வாரங்களில் நடைபெற்ற தாக்குதல்களில் சுமார் 1000 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 4800க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்றும் எல்லை தாண்டிய மருத்துவர்கள் அமைப்பு (MSF) தெரிவித்துள்ளது.

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் சிரியாவில் 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு உத்தரவிட்ட நிலையிலும் அங்கு சிரிய ராணுவத்தின் தாக்குதல் தொடர்வது குறிப்பிடத்தக்கது.


சிரியாவில் அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் போர் நீடித்து வருகிறது. கிளர்ச்சியாளர்களை அழிக்கிறோம் என்ற பெயரில் அப்பாவி மக்கள் பலரை சிரிய ராணுவம் கொன்று குவிக்கிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP