கஷோகி கொலை: 5 பேருக்கு மரணதண்டனை கோரும் சவுதி அரசு

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றம் சட்ட்டப்பட்டுள்ள 5 பேருக்கு மரண தண்டனை கோரியுள்ளது சவுதி அரசு வழக்கறிஞர் அலுவலகம்.
 | 

கஷோகி கொலை: 5 பேருக்கு மரணதண்டனை கோரும் சவுதி அரசு

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றம் சட்ட்டப்பட்டுள்ள 5 பேருக்கு மரண தண்டனை கோரியுள்ளது சவுதி அரசு வழக்கறிஞர் அலுவலகம்.

சவுதி அரசுக்கு எதிராக எழுதி வந்த அந்நாட்டை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி, துருக்கியில் வசித்து வந்தார். சவுதி தூதரகத்துக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்ற அவர், மாயமானார். அவரை தூதரகடத்தில் வைத்து சில மர்ம நபர்கள் கொலை செய்ததாகவும், சவுதி அரசின் ஆணையின் பேரில் இந்த கொலை நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. 

சர்வதேச அளவில் சவுதி அரசுக்கு எழுந்த நெருக்கடியை தொடர்ந்து, தூதரகத்தில் வைத்து ஒரு ஏற்பட்ட ஒரு தகராறில் கஷோகி இறந்ததாக சவுதி ஒப்புக்கொண்டது. 11 பேர் மீது குற்றம் சாட்டிய அரசு வழக்கறிஞர் அலுவலகம், அதில் 5 பேர் இந்த கொலையை திட்டமிட்டதாக கூறியுள்ளது. அவர்கள் ஐவருக்கும் மரணதண்டனை கோரவுள்ளதாக சவுதி அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் இந்த சம்பவத்தை பற்றி எதுவுமே தெரிவிக்காத சவுதி அரசு, தூதரகத்தில் ஏற்பட்ட தகராறால் கஷோகி இறந்ததாக முதலில் கூறியது. பின்னர் அவர் சில சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்டதாக தெரிவித்தது. இதுதொடர்பாக சர்வதேச அளவில் நெருக்கடி எழும்வரை சவுதி அரசு ஏன் காத்திருந்தது என விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த விவகாரத்தில் தனி விசாரணை நடத்தி வரும் துருக்கி அரசு, சவுதி அரசு நேரடியாக இந்த கொலையில் ஈடுபட்டதாகவும், சவுதி பட்டத்து இளவரசர் சல்மானின் பாதுகாவலர்கள், இந்த கொலையை நடத்தியதாகவும் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP