ஈரானில் விமான விபத்து; 11 பேர் பலி

ஷார்ஜாவில் இருந்து இஸ்தான்புல் சென்ற ஜெட் விமானம் ஒன்று ஈரான் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில் பயணித்த 11 பேரும் பலியாகியுள்ளனர்.
 | 

ஈரானில் விமான விபத்து; 11 பேர் பலி

ஈரானில் விமான விபத்து; 11 பேர் பலி

ஷார்ஜாவில் இருந்து இஸ்தான்புல் சென்ற ஜெட் விமானம் ஒன்று ஈரான் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில் பயணித்த 11 பேரும் பலியாகியுள்ளனர். 

துருக்கி நாட்டைச் சேர்ந்த தனியார் விமானம் ஒன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஷார்ஜாவில் இருந்து நேற்று(மார்ச்.11) புறப்பட்டது. துருக்கி இஸ்தான்புல் நகரத்திற்கு செல்லும் இந்த விமானம் ஈரான் மலைப்பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது கீழே விழுந்து நொறுங்கியது. சிறிது நேரத்தில் விமானம் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. அப்பகுதி வழியாக சென்ற மக்கள் இதைப்பார்த்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். மீட்புப்பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதில் பயணித்த 11 பேரும் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP