காபூலில் மீண்டும் ஒரு தீவிரவாத தாக்குதல்; 3 தீவிரவாதிகள் பலி, ஒருவர் கைது

ஆப்கானிஸ்தானில் இன்று காலையில் நடந்த குண்டு வெடிப்பில் தீவிரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளான்.
 | 

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மார்ஷல் ஃபாஹிம் ராணுவ பல்கலைக்கழகம் அருகே இன்று காலை பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. அதனையடுத்து தீவிரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் தீவிரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர். ஒரு தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளான். மேலும் இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

இரு தினங்களுக்கு முன்பு தான் காபூலில் நடந்த ஆம்புலன்ஸ் குண்டுவெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிலையில் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தியுள்ளது அங்குள்ள மக்களிடையே மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP