Logo

4 மாதங்களுக்குள் 48 பேருக்கு மரண தண்டனை! காற்றில் பறக்கும் சவுதி

சவுதியில் இந்தாண்டிட்ல் மட்டும் இதுவரை 48 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதை மனித உரிமைகள் ஆணையம் விமர்சித்துள்ளது.
 | 

4 மாதங்களுக்குள் 48 பேருக்கு மரண தண்டனை! காற்றில் பறக்கும் சவுதி

4 மாதங்களுக்குள் 48 பேருக்கு மரண தண்டனை! காற்றில் பறக்கும் சவுதி சவுதியில் இந்தாண்டில் மட்டும் இதுவரை 48 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதை மனித உரிமைகள் கண்காணிப்பு ஆணையம் விமர்சித்துள்ளது. 

சவுதியில் தீவிரவாதம், கொலை, பாலியல் வன்கொடுமை, போதை பொருள் கடத்தல், துப்பாக்கி முனையில் கொள்ளையடிப்பது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது. 

இது போல, சவுதியில் இந்தாண்டில் இதுபோல 48 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை மனித உரிமைகள் ஆணையம் விமர்சனம் செய்துள்ளது. 

 அங்கு, மரண தண்டனைக்கு வாளால் தலையை வெட்டி நிறைவேற்றபடும் முறை கடைபிடிக்கப்படுகிறது. இதனை மிகக் கொடூரமான தண்டனை முறையாக அந்த  அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இது குறித்து அவர்கள் குறிப்பிடும்போது, "இந்தாண்டு நிறைவேற்றப்பட்ட 48 மரண தண்டனை குற்றவாளிகளில் பாதிபேர் வன்முறையில் ஈடுபடாமல், போதை வழக்கில் மட்டும் தண்டனை பெற்றவர்கள்.  இது போன்ற செயல்களுக்கு மரண தண்டனை வழங்கும் மோசமான சட்ட அமைப்பை சவுதி மாற்ற வேண்டும். 2014 தொடக்கத்திலிருந்து 600 பேருக்கு சவுதி மரண தண்டனை வழங்கியுள்ளது, இதில் மூன்றில் ஒரு பங்கினர் போதை வழக்கில் தொடர்புடையவர்கள் தான்" என்று அந்த அமைப்பின் மத்திய கிழக்கு இயக்குனர் சரா லீ விட்சன் கூறியுள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP