Logo

உங்களுடைய மண்டை எப்போதும் எண்ணெய் பிசுக்குடன் இருக்கிறதா? இதோ டிப்ஸ்!

சிலருக்கு இயற்கையாகவே மண்டை எண்ணெய் தன்மையுடன் இருக்கும். இதனால் எப்போதும் அவர்களின் முகம் டல்லாக இருக்கும். சரியான விஷயங்களை பின்பற்றி அவர்கள் எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தலாம். அதற்கான டிப்ஸ்கள் இங்கே...
 | 

உங்களுடைய மண்டை எப்போதும் எண்ணெய் பிசுக்குடன் இருக்கிறதா? இதோ டிப்ஸ்!

எப்போதும் டல்லான முகத்துடன் இருப்பவர்களில் 90 சதவீதம் பேருக்கு 'ஆய்லி ஸ்கால்ப்பாக' இருக்கும். இது அவ்வளவு பெரிய பிரச்னையில்லை. நாங்கள் சொல்லும் டிப்ஸ்களை பின்பற்றி பாருங்கள். 

சரியான பராமரிப்பு 

அவரவர் கூந்தலுக்கு ஏற்ற ஷாம்பூவை பயன்படுத்துவது அவசியம். அதனால் எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தும் ஷாம்பூவை, கட்டாயம் மருத்துவரின் பரிந்துரையுடன் பயன்படுத்துங்கள். 

அதிக அலசல் வேண்டாம் 

அதிகமுறை தலையை அலசினால் எண்ணெய் தன்மை போய்விடும் என்பதை விட, சீபத்தின் சுரப்பு அதிகமாகி கூந்தல் இன்னும் பிசுபிசுப்பாகும் என்பதே சரியான உண்மை. அதனால் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மட்டும் தலை அலசுங்கள். 

ஹேர் ஸ்டைல் 

எப்போதும் ஒரே ஹேர் ஸ்டைலை பின்பற்றுவதை விட, அவ்வப்போது மாற்றிப் பாருங்கள். இது உங்களுக்கு வித்தியாசமான தோற்றத்தைத் தரும். 

ட்ரை ஷாம்பூ 

ஸ்கால்ப் அரித்தால் உடனே தலைக்குக் குளிப்பதற்கு பதிலாக, வெறும் ஷாம்பூவை கூந்தலில் அப்ளை செய்து விட்டு விடுங்கள். இது அதிக எண்ணெய்யை ஈர்த்து, கூந்தலை அடர்த்தியாக மாற்றி, கூந்தலுக்கு நறுமணத்தைக் கொடுக்கும். இந்த ட்ரை ஷாம்பூ, இரண்டு, மூன்று நாட்கள் வரை உங்களுக்கு உதவியாக இருக்கும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP