100 % உடல் எடையை குறைக்க உதவும் தேனீர்

ஒரு இலவங்கப்பட்டை மற்றும் அரை டீஸ்பூன் மஞ்சள் தூளை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வெதுவெதுப்பாக அருந்தவும், இந்த டீயில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் இருப்பதுடன், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
 | 

100 % உடல் எடையை குறைக்க உதவும்  தேனீர்

கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டும் உடல் எடை குறையவில்லையா?  உங்களுக்கான, சுவையான தேனீரைப்பற்றி பார்க்கலாம்...காலை எழுந்தவுடன் தேனீர் என்பது பலருக்கு மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது. இத்தகைய தேனீர் உங்களின் உடல் எடையை, 100 சதவிகிதம் கட்டுப்படுத்தும் என கூறினால் நம்ப முடியுமா? ஆமாங்க உண்மைதான்... சுவை மட்டுமல்ல, இந்த டீ மிகவும் நறுமணம் மிக்கதும் ஆகும். அப்படி என்ன டீ அது... தினமும் நம் சமையல் அறையில் இருக்க கூடிய மசாலா பொருளான, இலவங்கப்பட்டையை வைத்து தயாரிக்கப்படும் தேனீர் தான் இது..

இந்த இலவங்கப்பட்டையில் உள்ள நன்மைகளை பற்றி பார்க்கலாம்.

100 % உடல் எடையை குறைக்க உதவும்  தேனீர்

இலவங்கப்பட்டை உடலில் சேர்ந்திருக்கும், கொழுப்பு அடுக்குகளை கரைத்து எடை இழப்பிற்கு வழி வகை செய்கிறது.

உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, இறந்த‌ செல்களை நீக்க கூடிய அற்புத மருந்தாக இந்த பட்டை செயல்படுகிறது.

இலவங்கப்பட்டையை உட்கொள்ளும் பொழுது, விரைவிலேயே வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும்.

தொண்டையில் ஏற்படும் வீக்கம், புண் போன்ற பிரச்னைக்கு சிறந்த தீர்வை இந்த இலவங்கப்பட்டை  அளிக்கிறது.

இது செரிமான சக்தியை அதிகரித்து, உட்கொள்ளப்படும் உணவு நல்ல முறையில் ஜீரணம் ஆவதை உறுதி செய்கிறது.

இலவங்கப்பட்டையை கொண்டு செய்யப்படும் தேனீரின் நன்மைகளையும், அதனால் கிடைக்க கூடிய நன்மைகளையும் பற்றி பார்க்கலாம்.

எலுமிச்சை‍ இலவங்கப்பட்டை தேனீர்:

100 % உடல் எடையை குறைக்க உதவும்  தேனீர்

ஒரு எலுமிச்சை பழம், ஒரு டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூளை சூடான நீரில் போட்டு, பின்னர் வெதுவெதுப்பாக அருந்தவும். இதில் சேர்க்கப்படும்.  எலுமிச்சையில் உடலுக்கு தேவையான உயிர்ச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றம்  நிறைந்துள்ளது.   இது, நம் உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றுவதுடன், செரிமான உறுப்புகளை பாதுகாத்து, நல்ல செரிமானத்திற்கு வழிவகை செய்கிறது. 

தேன் இலவங்கப்பட்டை தேனீர்:

100 % உடல் எடையை குறைக்க உதவும்  தேனீர்

ஒரு டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூளுடன், ஒரு டீஸ்பூன் தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து அருந்த வேண்டும். பொதுவாக, தேன் பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. தேன் இலவங்கப்பட்டையை சேர்த்து அருந்தும் பொழுது, உடல் எடை குறைவதுடன் சருமமும் பளபளப்பாக இருக்கும்.

மஞ்சள் இலவங்கப்பட்டை தேனீர்:

100 % உடல் எடையை குறைக்க உதவும்  தேனீர்

ஒரு இலவங்கப்பட்டை மற்றும் அரை டீஸ்பூன் மஞ்சள் தூளை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வெதுவெதுப்பாக அருந்தவும், இந்த டீயில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் இருப்பதுடன், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.  

கிராம்பு, இஞ்சி இலவங்கப்பட்டை தேனீர்:

100 % உடல் எடையை குறைக்க உதவும்  தேனீர்

அரை இன்ச் இலவங்கப்பட்டை, அரை இன்ச் இஞ்சி மற்றும்,இரண்டு கிராம்பு ஆகியவற்றை பொடியக்கி தண்னீரில் கொதிக்க வைக்க வேண்டும். இது உடலுக்கு நன்மை பயப்பதுடன், உடல் எடையையும் கட்டுக்குள் வைக்கிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP