Logo

உங்கள் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டுமா?

பொதுவாக நாம் அனைவரும் எக்கால நிலையிலும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்னை என்னவென்றால் அது சரும வறட்சி என்றால் அது மிகையாகாது.
 | 

உங்கள் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டுமா?

பொதுவாக நாம் அனைவரும் எக்கால நிலையிலும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்னை என்னவென்றால்  அது சரும வறட்சி என்றால் அது மிகையாகாது.

சரும வறட்சி என்பது காலநிலை மாற்றத்தினாலும், நாம் உண்ணும் உணவில் ஏற்படும் மாற்றத்தினாலும் ஏற்படக்கூடியவை. இதற்கு முறையான  பராமரிப்பு அவசியமான ஒன்று.

மாய்ஸ்சரைசர்  என்பது நம் சருமத்தில் வறட்சியை நீக்கி, ஈரப்பதமாக வைத்திருப்பதற்காகவும், தளர்ந்த சருமத்தை போக்கி இளமையாக வைத்திருக்கவும், நாம் மாய்சரைஸர்கள் (lotion) உபயோகபடுத்துகிறோம்.

சருமத்தில் வெடிப்புகள், சுருக்கள், சருமம் மென்மை இழத்தல்,கோடுகள் தோன்ற காரணமான வானிலை மற்றும் காலநிலையால் சருமம் எளிதில் வறட்சி அடைந்து விடுகிறது. எனவே, பலர்  இத்தகைய வறட்சியை தடுப்பதற்கு பல அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவார்கள். அதற்கேற்றார்ப்போல சந்தைகளிலும் கெமிக்கல் (chemical)  மிகுந்த  பல லோஷன்கள் கிடைக்கின்றன.

இவைகள் சரும செல்களை விரைவில் பாதித்து சருமத்தின் அழகையே முற்றிலும் கெடுத்து விடுகிறது. எனவே, இயற்கையாகவே நமக்கு கிடைக்கும் பொருட்களை கொண்ட லோஷன்களை  நாம் பயன்படுத்தினால் எளிதில் சரும பாதிப்பிலிருந்து விடுபடலாம்.

உங்கள் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டுமா?

கீழ்க்காணும் இயற்கை பொருட்களை உபயோகிப்பதன் மூலம் சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் வைத்து கொள்ளலாம்.

தேன்: சருமத்தை மென்மையாக வைத்துக்கொள்ள மிகவும் உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், கருமை நிறத்தை மாற்ற கூடிய வல்லமை பெற்றது.

பாதாம்: சருமம் பளபளப்பு மற்றும் மென்மையாக வைத்துக் கொள்ள மிகவும் இன்றியமையாத ஒரு பொருள் பாதாம் (almond) மட்டுமே.

கற்றாழை : சருமத்தின் வறட்சியை  மட்டும் அல்லாத பிற சரும பாதிப்பை போக்க வல்லது கற்றாழை என்றால் அது மிகையாகாது.

தேங்காய் எண்ணெய்:குளிர் காலங்களில் நாம் அதிகமாக பயன்படுத்தும் அத்தியாவசிய பொருளென்றால் அது தேங்காய் எண்ணெய் மட்டுமே என்பது, நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இது நம் சருமத்தில் ஊடுருவிச் சென்று வறட்சியை நீக்கி நீண்ட நேரம் ஈரப்பதமாக வைத்துக்கொள்ள உதவும்.

மேற்கொண்ட இயற்கையான பொருட்களைப்கொண்ட மாய்ஷரைசர்களை பயன்படுத்தினால் சருமத்துளைகள் நன்கு சுவாசித்து வறட்சியை போக்கி சருமத்தை பொலிவோடு வைத்திருக்கும்.

குறிப்பாக சருமத்திற்கு தேவையானது அதிக ஈரப்பதமுள்ள மாய்சரைஸர்கள். அதிலும் முக்கியமாக நம் சருமத்தின் மீது உபயோகிக்கும் போது குறைந்தது 20 அல்லது 30 நிமிடங்கள்  சருமம் ஈரப்பதத்துடன் இருந்தால் மிகவும் நல்லது. 

மாய்சரைஸர்கள் தயாரிக்கும் போது இயற்கையாக உள்ள (கற்றாழை), Badham (பாதாம்), Blackseed  (கருஞ்சீரகம்), Honey (தூய தேன்), coconut oil (தூய தேங்காய் எண்ணெய்), இவைகளுடன் சேர்ந்து தயாரிக்கப்பட்ட  லோஷன்கள் (lotion), நம் சருமத்திற்கு  ஈரப்பதத்தை மட்டுமில்லாமல் பளபளப்பையும், மென்மையயையும், அழகையும், பாதுகாப்பு தருவதோடு மட்டுமல்லாமல் தருவதொடல்லாமல், நம் சருமத்திற்கு நல்லதொரு உணவாக கருதப்படுகிறது.

உங்கள் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டுமா?

வி. ராமசுந்தரம்

நிர்வாக இயக்குநர் மற்றும் ஆராய்ச்சி ஆலோசகர்,

இன்னோராம் பயோஜெனிக்ஸ், சென்னை.

இந்தியா

WWW.innorambiogenics.com.

WWW.innorambiogenics.in.

EMAIL: venkatraman.ramasundaram@gmail.com.

தொடர்புக்கு: 97109 36736/9094040055 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP