நீ வெற்றி பெறுவாய். சோர்வு வேண்டா. தெம்பாகவும், அமைதியாகவும் பரீட்சை எழுது.

நீ வெற்றி பெறுவாய். சோர்வு வேண்டா. தெம்பாகவும், அமைதியாகவும் பரீட்சை எழுது.

நீ வெற்றி பெறுவாய். சோர்வு வேண்டா. தெம்பாகவும், அமைதியாகவும் பரீட்சை எழுது.
X

ஷோலாப்பூர் ஜில்லா, அக்கல்கோட்டைச் சேர்ந்த திரு. ஸபட்ணேகர் என்பவர் வக்கீலுக்குப் படுத்துக் கொண்டிருந்தார். அவருடன் படிக்கும் திரு. சேவடே அவரைச் சந்தித்தார். அவரின் புற நண்பர்களும் ஒன்றாகக் கூடித் தாங்கள் படிக்கும் பாடங்களை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டனர். அவர்களுக்குள் ஏற்பட்ட வினா விடைகளிளுலிருந்தும், சேவடே என்பவர்தான் எல்லோரை காட்டிலும் பரீச்சைக்கு தயாரற்ற நிலையிலிருந்தார் என்று தெரிந்தது. எனவே, மற்றவர்கள் அவரைக் கேலி செய்தனர். தாம் சரியாக படிக்கவில்லையாயினும் தமது சாய்பாபா இருப்பதால் தம்மை வெற்றியடையச் செய்வார் என்று தான் உறுதியாக நம்புவதாக க்கூறினார். திரு. ஸபட்ணேகர் இக்கூற்றால் ஆச்சரியமடைந்தார்.

நீ வெற்றி பெறுவாய். சோர்வு வேண்டா. தெம்பாகவும், அமைதியாகவும் பரீட்சை எழுது.

அவர் சேவடேயைத் தனியே அழைத்துக் கொண்டுப்போய், அவர் அவ்வளவு உயர்வு படக்கூறும் சாய்பாபா என்பவர் யார் என்று கேட்டார். அஹமத்நகர் ஜில்லா ஷீரடியில் உள்ள மசூதியில் பக்கிரி ஒருவர் வாழ்கிறார். அவர் மிகப்பெரும் 'ஸத்புருஷர்' . மற்ற ஞானிகள் இருக்கலாம், ஆனால், இவர் ஒப்பற்ற வர். முன்வினையில் பல நற்கருமங்களின் பலன் பெருமளவு குவிக்கப்பட்டு இருந்தாலன்றி ஒருவரும் அவரைப்பார்க்க முடியாது. நான் முழுமையும் அவரையே நம்புகிறேன். அவர் சொல்வது பொய்யாவதில்லை. அடுத்த ஆண்டு நான் தேர்வில் தேறிவிடுவேன் என்று அவர் எனக்கு உறுதிகூறி இருக்கிறார்.

நீ வெற்றி பெறுவாய். சோர்வு வேண்டா. தெம்பாகவும், அமைதியாகவும் பரீட்சை எழுது.

கடைசி வருடப் பரீட்சையையும் அவர்தம் கருணையால், நான் தேறிவிடுவேன் எனக்கூறினார். திரு. ஸபட்ணேகர் அவர் நம்பிக்கைக் கண்டு சிரித்து அவரையும் , சாய்பாபாவையும் கேலி செய்தார். தேர்வு வந்தது, சாய்பாபா கூறி யதுப்போல சேவடே பரீட்சையில் தேர்ச்சியடைந்தார். அடுத்த ஆண்டிற்கு தேர்ச்சிப் பெற்றார். சாய்பாபாவின் உறுதிமொழிகள் பொய்ப்பதில்லை என்றும், நிறைவேறாமல் போவதில்லை என்றும், மற்றும் முற்றிலும் உண்மையாகவே நிகழ்கின்றன என்பதை திரு .ஸபட்ணேகர் உணர்ந்தார்.

டாக்டர் வி. ராம்சுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்.

newstm.in

Tags:
Next Story
Share it