சாய்பாபா உணவைச் செலவழிக்கும் முறை

பக்தர்கள் எவராவது காணிக்கையாக உணவுப் பொருட்களைக் கொண்டு வந்தால் அவர் அதை ஏற்று அங்கு குழுமியிருக்கும் ஏனைய பக்தர்களுக்கு பகிர்ந்து தந்துவிடுவார். சாய்பாபாவின் செய்கைகளும், நடத்தைகளும் மற்றவர்களுக்கு புரியாத புதிராக இருந்தன.

சாய்பாபா உணவைச் செலவழிக்கும் முறை
X

சாய்பாபாவின் அன்றாட உணவுமுறை பழக்கவழக்கங்கள்:

சாய்பாபா, ஏதாவது 5 வீட்டுக்கு சென்று "அம்மா, தயவு செய்து எனக்கு ஒரே ஒரு ரொட்டித் துண்டு தா " என்று கேட்பார். அவர்கள் பிச்சை இடுவதற்கு வசதியாகத் தன்னுடைய தோளில் நீண்ட துண்டை ஒன்றை மடித்துப் போட்டுக் கொள்வார். அது பையைப் போல காணப்படும் கையில் ஒரு தகரக் குவளையை ஏந்தி இருப்பார் .

பிச்சையிட வருபவர்கள் திட உணவுப் பொருட்களான ரெட்டி, சாதம் போன்றவற்றை இட்டால் அதைத் துணியில் வாங்கிக் கொள்வார்.
5 வீட்டில் வாங்கியவுடன் மசூதிக்குத் திரும்பி விடுவார். வாங்கிவந்த உணவை உடனடியாக சாப்பிட்டு விட மாட்டார். அதிலிருந்து சிறிதளவு உணவை எடுத்துத் துணி ஒன்றில் முடிந்து அந்த உணவுப் பொட்டலத்தை எரியும் ஹோம குண்டத்தில் போடுவார்.

அதன் பிறகு அங்கு கூடி இருக்கும் மற்றவர்களுடன் சேர்ந்து எல்லாவற்றையும் ஒன்று கலந்து பகிர்ந்து கொள்வார். இதிலும் மீதியாகக் கூடிய உணவு வகைகளை மண்பானை ஓன்றிலே போட்டு விடுவார். அதை மசூதியிலே அனைவரும் பார்க்கக் கூடிய இடத்திலே வைத்து விடுவார். இதை மூட மாட்டார் தேவைப்படுவோர் அதில் இருந்து உணவு எடுத்து உண்ணலாம். அங்கிருக்கும் வேலைக்காரா்களோ அங்கே வரக்கூடிய பிச்சைக்காரா்களோ அதை எடுத்துக் கொள்வார்கள்.

சில சமயங்களில் அங்கு இருக்கக் கூடிய பூனை, நாய் போன்ற பிராணிகளும் அந்த உணவைச் சாப்பிடுவதுண்டு. எல்லாவற்றையும் சாய்பாபா பார்த்துக் கொண்டிருப்பார். ஆனால், எவரையும் சாய்பாபா கடிந்து விலக்க மாட்டார், துரத்த மாட்டார். பக்தர்கள் எவராவது காணிக்கையாக உணவுப் பொருட்களைக் கொண்டு வந்தால் அவர் அதை ஏற்று அங்கு குழுமியிருக்கும் ஏனைய பக்தர்களுக்கு பகிர்ந்து தந்துவிடுவார்.
சாய்பாபாவின் செய்கைகளும், நடத்தைகளும் மற்றவர்களுக்கு புரியாத புதிராக இருந்தன.

ஓம் ஸ்ரீசாய்ராம் !!!

சாய்பாபா உணவைச் செலவழிக்கும் முறை

டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்
EMAIL: venkatraman.ramasundaram@gmail.com

newstm.in

newstm.in

Tags:
Next Story
Share it