வழக்கறிஞருக்கு அறிவுரை

பண்டரிபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் சாய்பாபாவைத் தரிசிக்க ஷீரடி வந்திருந்தார். தரிசனம் முடிந்ததும், அந்தப் பகுதியில் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தார். சாய்பாபா அவ்வப்போது பக்தர்களிடம் உரையாடுவதைக் கவனமாகக் கேட்டவாறு இருந்தார் .

 வழக்கறிஞருக்கு அறிவுரை
X

பண்டரிபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் சாய்பாபாவைத் தரிசிக்க ஷீரடி வந்திருந்தார். தரிசனம் முடிந்ததும், அந்தப் பகுதியில் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தார். சாய்பாபா அவ்வப்போது பக்தர்களிடம் உரையாடுவதைக் கவனமாகக் கேட்டவாறு இருந்தார் .

அப்போது, திடீரென்று, "மக்கள் அனைவரும் மிகவும் மோசமானவர்களாக இருந்து வருகின்றனர். நேரடியாகப் பார்க்கும் போது ஒன்றும், பின்புறமாக வேறொன்றுமாகச் செயல்படுகின்றனர். இப்படிப்பட்ட வஞ்சகமான நல்ல முன்னேற்றத்தையும், சுபிட்சத்தையும் அடைய முடியும்" என்றார் சாய்பாபா. இப்படி அவர் திடீரென்று கூறியதன் காரணம் ஒருவருக்கு புரியவில்லை, அந்த வழக்கறிஞரைத் தவிர.

அவர் தன்னருகே அமர்ந்திருந்த சாய்பாபாவின் பக்தர் காகா சாகேப்பிடம் கூறினார், "சாய்பாபா இப்படிக் கூறியது எனக்காகவே. காரணம் தனது நோய் குணமாக வேண்டும் என்று ஷீரடியில் சாய்பாபாவைத் தரிசிக்க வந்திருந்தார். எங்கள் நீதிமான் நூல்கர். அதனை அவர் என்னிடம் கூறியபோது, தங்கள் நோய் குணமடைய சாய்பாபாவை நானும் பிரார்த்திப்பதாகக் சொன்னேன். ஆனால் பின்னர், அதைப் பற்றி எனது சக வழக்கறிஞர்களிடம் நான் கிண்டலடித்துப் பேசினேன் படித்தவர்களே இப்படி முட்டாள்தனமாக நடந்து கொள்கிறார்களே! நோய் குணமாக வேண்டுமென்றால் நல்ல மருத்துவர்களாகப் போய்ப் பார்க்க வேண்டும். அதை விடுத்து சாய்பாபாவைப் போய்ப் பார்த்தால் குணம் கிடைத்துவிடுமா என்ன? என்றேன்.

இதைத்தான் சாய்பாபா இப்போது இப்படிக் குறிப்பிட்டுப் பேசுகிறார். பண்டரிபுரத்தில் நடந்ததைத் தெளிவாக அறிந்து கொண்டிருக்கிறார் சாய்பாபா. ஞானி அவர். எனக்கு நல்ல அறிவுரையையும் வழங்கிவிட்டார் " என்று உணர்ச்சி வசப்பட்டுப் பேசினார் அந்த வழக்கறிஞர்.

ஓம் ஸ்ரீசாய்ராம் !!!

 வழக்கறிஞருக்கு அறிவுரை

டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்
EMAIL: venkatraman.ramasundaram@gmail.com

newstm.in

newstm.in

Tags:
Next Story
Share it