Logo

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்

இரக்கம், கருணை, அன்பு, நம்பிக்கை இவையெல்லாமே இறைவனை நெருங்கும் வழிகள் என்று இந்துதர்மம் சொல்கின்றன. இந்த வழியில் நடந்தால் தீய பழக்கத்திலிருக்கும் மனிதனை கூட நல்வழியில் ஈடுபட வைக்கலாம்.
 | 

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்

மனிதர்கள்தான் எத்தனை வகை. இளகிய மனங்களைக் கொண்ட மனிதர்களும் உண்டு. கல்நெஞ்சம் என்று சொல்லுமளவுக்கு கடினத்தன்மை கொண்ட நெஞ்சங்களும் உண்டு. ஆனால் கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்று சொல்வார்கள். இரக்கம், கருணை, அன்பு, நம்பிக்கை இவையெல்லாமே இறைவனை நெருங்கும் வழிகள் என்று இந்துதர்மம் சொல்கின்றன. இந்த வழியில் நடந்தால் கடுமையான தீய பழக்கத்தி லிருக்கும் மனிதனை கூட நல்வழியில் ஈடுபட வைக்கலாம். 

ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட பெரியவர் ஒருவர் இருந்தார். எதையும் பொறுமையுடன் அணுகும் அவருக்கு தெரிந்ததெல்லாம் அன்பு அன்பு மட்டுமே. எத்தகைய சோதனையிலும் கோபமே படாமல் மகிழ்ச்சியாக இருப்பார், பகைவனிடமும் அன்பு காட்டும் குணத்தை அவரிடம் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும்.

அந்த ஊரில் தீயப்பழக்கங்களோடு இருக்கும் மனிதர்கள் கூட அவரது அன்புக்கு முன் தோற்றுப்போனார்கள். சாந்தமே உருவான இறைவனின் அவதாரமோ என்று கூட அவரை நினைத்து மகிழ்ந்தார்கள் பக்தர்கள்.ஒருநாள் இரவு அந்தப் பெரியவர் ஆன்மிக புத்தகம் ஒன்றை படித்துக் கொண்டிருந்தார்.

அச்சமயம் திருடன் ஒருவன் கையில் கத்தியுடன் மெதுவாக அவர் அறைக்குள் வந்தான்.நிமிர்ந்து பார்த்த அவர் எதுவும் பேசாமல் மீண்டும் புத்த கத்துக்குள் முகம் புதைத்தார். அவனுக்கு ஆச்சரியம் ஒருபுறம் கோவம் மறுபுறம்.. மரியாதையாக  லாக்கர் சாவியை எடு என்றான். இவர் தலையை நிமிராமல் அதற்கு பூட்டெல்லாம் கிடையாதுப்பா.  திறந்து எடுத்துக்கொள் என்னை தொல்லை செய்யாதே என்றார். இவனுக்கு மீண்டும் சந்தேகம் ஆளைப் பார்த்தால் சாதுவாக இருக்கிறார். ஆனால் நம்மை ஏதாவது செய்துவிடுவாரோ என்று நினைத்து பயந்தபடியே லாக்கரை திறந்து பணத்தை எடுத்தான்.

எல்லாவற்றையும் எடுத்துவிடாதே எனக்கும் கொஞ்சம் வைத்து விட்டு செல். நாளை மின்சாரக்கட்டணம் கட்டவேண்டும் என்றார். அவர் சொன்னதுபடி கொஞ்சம் பணத்தை உள்ளே வைத்து இவருடைய வீடில்லையோ என்று நினைத்தப்படி வெளியே செல்ல முயன்றான்.மீண்டும் அவர் அவனை தடுத்து பணத்தை எடுத்துக்கொண்டதற்கு நன்றி சொல்லாமல் போகிறாயே என்றார்.

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்

அவனுக்கு உள்ளுக்குள் ஒரே உதறல் வேறு. அச்சத்தோடு நன்றி என்று சொன்னபடி சென்றான். இவன் அவரது வீட்டில் செய்த திருட்டை மக்கள் தெரிந்துகொண்டு அவனை தொடர்ந்தார்கள். பல நாள் திருடன் ஒருநாள் மாட்டிக்கொள்வான் என்று சொல்வார்கள். அவனும் மாட்டிக்கொண்டான். நீதிபதியின் முன்பு அவனை நிறுத்தி  பெரிய மனிதரின் வீட்டில் கொள்ளையடித்த சம்பவத்தைப் பற்றி கூறினார்கள். இதற்கு சாட்சியாக அந்தப் பெரிய மனிதரும் வந்திருந்தார். 

இந்தத் திருடன் உங்கள் வீட்டில் திருடியது உண்மையா என்று கேட்டார் நீதிபதி. இல்லையே அவன் திருடவில்லை. நானாகத்தான் கொடுத்தேன். பதிலுக்கு அவன் எனக்கு நன்றி கூட கூறிவிட்டு சென்றானே என்றார். ஆனாலும் எஞ்சியவர்கள் வீட்டில் திருடிய குற்றத்துக்கு அவனுக்கு உரிய தண்டனை கிடைக்கவே செய்தது. 

தண்டனைக்காலம் முழுமைக்கும் அவனுக்கு அதே சிந்தனை. நாம் செய்தது தவறு என்றாலும் அவரால் எப்படி ஒரு வார்த்தையும் குறைத்து கூற இயலவில்லை. எல்லோரும் என் மீது கோவப்படும்போது அவர் மட்டுமே அன்பாக நடந்துகொண்டாரே. அவர் நினைத்திருந்தால் கடுமையான தண்டனையைப் பெற்றுத்தரக்கூடும். ஆனால் ஏன் என் மீது அன்பு செலுத்தினார் என்று தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தான். தண்டனைக்காலம் முடிந்து வெளியே வந்ததும் அந்தப் பெரியவரிடம் போய் கேட்டான்.

அவர் பொறுமையாக பதிலளித்தார். கடுமையான குணம் உன்னுடையது. அன்பு செலுத்தும் குணம் என்னுடயது என்றார். அவன் மனம் திருந்தி அவருடனே வசித்து நல்ல செயல்களை செய்தான். 
 


newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP