Logo

சனிபகவானை மகிழ்விக்க என்ன செய்யலாம்

இறைவனே நமக்கான சோதனைகளை கொடுக்கும் போது அதிலிருந்து மீள்வ தற்கு மீண்டும் அவனிடமே சரணடைவது தான் நமது மீட்சிக்கான வழி. ஜாதகங் களை ஆராய்ந்து பார்க்கும் போது நவக் கிரகங்களை...
 | 

சனிபகவானை மகிழ்விக்க என்ன செய்யலாம்

கோபத்தில் இருப்பவர்களிடம் இறங்கி போனால் அவர்களது கருணை மிக்க பார்வை நம் மீது திரும்பும் என்பது இயற்கை. இது மனிதர்களை விட இறைவனுக்கு நன்றாகவே பொருந்தும்.

நமது கர்மாவால் முந்தைய பிறவி கடனைத் தீர்க்கவே மீண்டும் மனிதனாக பிறப்பெடுத்திருக்கிறோம். இப்பிறவி யிலும் அதற்கேற்ப பலன்களை அனுபவிக்கிறோம். அப்படி இருக்கும் போது கெடுதல் தரக்கூடிய பலன்களை பெறும் நேரங்களில் நமக்கு கைகொடுப்பது இறைவனே.

இறைவனே நமக்கான சோதனைகளை கொடுக்கும் போது அதிலிருந்து மீள்வதற்கு மீண்டும் அவனிடமே சரணடைவது தான் நமது மீட்சிக்கான வழி. ஜாதகங்களை ஆராய்ந்து பார்க்கும் போது நவக்கிரகங்களை வழி படுவதன் மூலம் நம் வாழ் வில் உண்டாகும் சோதனைக்காலங்களை பக்குவமாக கழிந்து விடலாம் என்கிறார்கள்.

நவக்கிரகங்களில் ஜாதகரின் கட்டத்தில் யாருடைய பார்வை கெடுதல் தரும் வகையில் அமைந்திருக்கிறதோ அவர் அந்த நவக்கிரகத்துக்குரிய பரிகாரங்களைச் செய்வதே இயல்பு. நவக்கிரகங்களில் ராகு, கேது ஆதிக்கத் தை விட சனி பகவானின் பார்வை படும்போதுதான் மிகுந்த சிக்கலுக்கு ஆளாகிறோம்.

கிரகங்களில் வலிமையானவர் சனிபகவான், இவர் யமதர்ம மகாராஜாவின் சகோதரரும் கூட. பாரபட்சமின்றி நடந்து கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்ட சர்வேஸ்வரனையும் விட்டுவைக்காததாலேயே இவர் எம்பெரு மானாகிய சிவ பெருமானால் ஈஸ்வரர் என்னும்பட்டத்தைத் தாங்கி சனீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். பூலோகத்தில் மட்டுமல்ல மூவுலகிலும் இவரைக் கண்டு அச்சம் கொள்கிறார்கள்.

ஜோதிட சாஸ்திரத்தில் இவருக்கு மந்தன் என்ற பெயரும் உண்டு. நவக்கிரகங் களில் மெதுவாக நகரும் சனிபகவான் 12 ராசிகளில் ஒவ்வொரு ராசியிலும்  இரண்டரை ஆண்டுகள் தங்குகிறார். ஜாதகத்தில் நடக்கும் திசைக்கேற்ப பொங்குச்சனி, அஷ்டமச்சனி, ஏழரைச் சனி என ஒருவர் வாழ்வில் நடக்கும் சனி திசையில் கடுமையான சோதனைக்கட்டங்களை உண் டாக்கினாலும் உரிய முறையில் அவனை வழிபட்டால் மகிழ்ந்து தீங்கை குறைத்து நன்மையை உண்டாக்குவார். அதனால் தான் ஆலய வழிபாடுகளில் நவக்கிரக வழிபாடும் அவசியம் என்பதை முன்னோர்கள் உணர்த்தும் வகையில் செயல்பட்டா ர்கள்.

சனீஸ்வரனின் தாக்கத்தில் இருப்பவர்கள் சிவாலயங்களில் அமைந்துள்ள சனீஸ்வரர் சன்னிதி சென்று அங்கிருக்கும் சனீஸ்வரரை வழிபட்டு சனீ காயத்ரி மந்திரங்கள் மற்றும் பலன் தரும் சனி ஸ்லோகம் சொல்வதன் மூலம் அவரது உக்கிரமான பார்வையிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

சனி காயத்ரி மந்திரம்:

 

ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி 
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்!

 

ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி 
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்!

 

ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி 
தன்னோ சனைச்சர ப்ரசோதயாத்!

 

ஓம் சனீஸ்வராய வித்மஹே சாயாபுத்ராய தீமஹி 
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்!

 

ஓம் சதுர்புஜாய வித்மஹே தண்டஹஸ்தாய தீமஹி 
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்!

 

சனி பலன் தரும் மந்திரம்:

நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம யமாக்ரஜம்
சாயா மார் தாண்டஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம்

பொருள்:

 கண்ணின் மை போன்று கருமை நிறம் கொண்டவனே. கதிரவனின் மைந்தனே. எமதர்மனின் சகோதரனே. சாயா தேவியின் புத்ரனே. மெதுவாக சஞ்சரிப் பவனே, சனிபகவானே உன்னைப் போற்றுகிறேன் என்பதுதான் இதன் பொருள்.

சனியின் உக்ரபார்வை பட்டு சனிதோஷம் கொண்டிருப்பவர்கள் மட்டுமல்ல எல்லோருமே இந்த ஸ்லோகத்தைச் சொல்லலாம். ஏனெனில் சனியைப் போல் கெடுப்பார் இல்லை என்று சொன்னவர்கள் தான் சனியை போல் கொடுப்பாரும் இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.

 

 Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP