புலிக்கு சமாதி..

சாய்பாபா இப்பூலகை விட்டுப் பிரிந்து செல்வதற்கு சுமார் ஏழு நாட்களுக்கு முன்பு, துவாரகா மயியிக்கு ஒரு மாட்டு வண்டி வந்தது. அதனுள் ஒரு புலி. சங்கிலியால் அதனைக் கட்டியிருந்தார்கள். அது நோய்வாய்ப்பட்டிருப்பது தெரித்தது . ரணம் தாங்காமல் அந்தப் புலி துடித்துக் கொண்டிருந்தது.

புலிக்கு சமாதி..
X

சாய்பாபா இப்பூலகை விட்டுப் பிரிந்து செல்வதற்கு சுமார் ஏழு நாட்களுக்கு முன்பு, துவாரகா மயியிக்கு ஒரு மாட்டு வண்டி வந்தது. அதனுள் ஒரு புலி. சங்கிலியால் அதனைக் கட்டியிருந்தார்கள். அது நோய்வாய்ப்பட்டிருப்பது தெரித்தது . ரணம் தாங்காமல் அந்தப் புலி துடித்துக் கொண்டிருந்தது. அதனை மெல்லக் கொண்டு வந்து மசூதி வாசலில் கிடத்தினார்கள். அதனை வேடிக்கைப் பார்க்க பெருங்கூட்டம் கூடியது. புலியின் சொந்தக்காரர். மிகவும் மெலிந்து , தளர்ந்து காணப்பட்ட சாய்பாபாவின் அருகே வந்தார்.

"சில நாட்களாய் இந்தப் புலி ஏதோ நோயினால் பிடிக்கப்பட்டுள்ளது. எத்தனையோ மருத்துவர்களிடம் காண்பித்தாகிவிட்டது . குணமே ஆகவில்லை. தற்போது உங்களிடம் அழைத்து வந்திருக்கிறோம் சாய்பாபா, நீங்கள் தான் கருணை கொண்டு ஏதாவது செய்ய வேண்டும்" என்று பணிவுடன் வேண்டுகோள் விடுத்தார் அந்தப் புலியின் சொந்தக்காரர். உடனே சாய்பாபா மெலிந்த குரலில். அதனால் அழைத்துக் கொண்டு தன் எதிரே வா" என்று கூறினார்.
அப்படியே தளர்ந்த அந்தப் புலியை மெல்ல, மெல்ல படியேற்றி சாய்பாபாவின் எதிரே கொண்டு வந்தனர். அந்தப் புலி அப்படியே சாய்பாபாவின் கண்களையே வைத்த கண்வாங்காமல் பார்த்தது அந்த பார்வையில் அன்பு, பாசம், நேசம், பரிவு போன்றவைகள் பிரகாசமாகத் தெரிந்தன.

அப்புறம், அந்த புலி தனது வாலைச் சுழற்றி தரையில் மூன்று முறை அடித்தது. அப்படியே துவண்டு மடிந்து தரையில் விழுந்தது. ஆம் அந்தப் புலியின் உயிர் பிரிந்து விட்டிருந்தது. வலியினால் வேதனை தாங்காமல் அந்தப் புலி அனுபவித்து வரும் அவஸ்தைகளுக்கு சாய்பாபா முடிவு காண்பித்துவிட்டார், அங்கிருந்தோர் அனைவரும் இதனைப் பார்த்து கதிகலங்கிப் போயினர். அந்தப் புலிக்கு ஷீரடியில் சமாதி நிறுவப்பட்டு இன்னுமும் இருந்து வருகிறது.
ஓம் ஸ்ரீசாய்ராம் !!!

புலிக்கு சமாதி..

டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்
EMAIL: venkatraman.ramasundaram@gmail.com

newstm.in

Next Story
Share it