Logo

இறைவனை அடைய ஆன்மிக பசி வேண்டும்...

தேவைக்கு எவ்வளவு வேண்டுமானாலும் உழைக்க தயாராக இருந்தது. உங்கள் பூனைகள் கொன்று பெருத்த பூனைகள் அவைகளுக்கு பசியின் அருமை தெரிந்திருக்கவில்லை. அத னால் ஓடி சென்று தன்னுடைய தேவையை நிறைவேற்றிக்கொள்ளும் குணம் அவர்களுக் கில்லை. அரசே தேவை என்று வந்தால்...
 | 

இறைவனை அடைய ஆன்மிக பசி வேண்டும்...

தங்கபூமி என்னும் நாட்டை அஸ்வத்தாமன் என்னும் அரசன் ஆண்டு வந்தான். அவனிடம் சேனாதிபதியாக புருஷோத்தமன் என்னும் இளைஞன் இருந்தான். இவன் வில் வித்தையிலும், வாள் வீச்சிலும் மிகச்சிறந்த வீரன்.  இவர்களது ஆற்றலால் தங்கபூமி உண்மையிலேயே தங்கம் விளை யும் பூமியாக செழிப்பாக இருந்தது. வந்தாரை வாழவைக்கும் பண்பை இவர்கள் கொண்டிருந்தாலும் எங்களால் முடியும் என்னும் செருக்கை கொண்டிருந்தார்கள்.

ஒருமுறை முனிவர் ஒருவர் அரசனைக் காண வந்திருந்தார். அரசன் தகுந்த மரியாதையோடு வரவேற்றாலும் அவன் பேச்சில் தெரிந்த கர்வத் து க்கு தகுந்த பாடத்தைக் கற்றுத்தரவேண்டும் என்று முடிவு செய்தார்.அவரது நல்லநேரம் போல எலி ஒன்று அவர்களுக்கு இடையில் துறு துறு வென்று  ஓடிக் கொண்டே இருந்தது. 

முனிவர் சற்றே ஏளனத்துடன்  என்ன மன்னா ஐந்தறிவு படைத்த விலங்குகளுக்கும் நீர்தான் பொறுப்போ என்றார். உடனே மன்னனின் அருகில் இருந்த புருஷோத்தமன்   தன்னிடமிருந்த உடை வாளை எடுத்து எலியின் மீது வீசினான். மன்னனுக்கு பெருமிதம் தாங்கவில்லை. பார்த்தீரா ஒரு வாள் வீச்சில் அதன் கதை முடிந்தது என்றார். ஆனால் அடுத்த கணமே எலி ஓடி வந்தது. எப்படி என் குறி தப்பிற்று என்று மீண்டும் புருஷோத்த மன் வாளை எறிந்தான். எலி மீண்டும்எகிறி குதித்து ஓடியது.இப்படியே அவன் எலியைத் துரத்துவதும் அது குதித்து ஓடுவதுமாய் நேரம் கழிந்தது. 

உனது நாடு வீரமிக்க நாடுதான் ஆனால் எலியை அடக்க வீரன் இல்லையே என்று சீண்டினார் முனிவர். அரசன் அஸ்வத்தாமனுக்கு அசிங்கமாகி விட்டது. உடனடியாக காவலாளிகளை அழைத்து அரண்மனையில் இருக்கும் பூனைகளை விட்டு துள்ளி திரியும் எலிகளை பிடிக்க சொன்னார். ஆனால் எல்லா ஆபத்துகளிலிருந்தும் எலி தப்பித்துக்கொண்டே இருந்தது. தோல்வியை ஏற்காத அரசன் அரண்மனையில் அதகளம் செய்யும் எலியை பிடிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று கூறினான்.

மக்களுக்கு அதிசயம். ஒரு எலியை பிடிக்க ஏன் அரசர் இத்தனை பிரயத்தனம் செய்கிறார் எனும் கேள்விகளோடு அரண்மனை நோக்கி படையெ டுத்தார்கள். முனிவரோ எலியைப் பிடிக்காமல் செல்வதில்லை என்று அங்கேயே காத்திருந்தார். மக்கள் தங்கள் வளர்ப்பு பிராணியான பூனையு டன் அரண்மனைக்குள் வந்தார்கள். பூனைகள் ஒவ்வொன்றும் புஷ்டியாக இருந்தது. ஆனாலும் எந்தப் பூனையாலும் எலியைப் பிடிக்க முடிய வில்லை. 

அரசன் முனிவரிடம் தன் தோல்வியை ஒப்புக்கொண்டான். ஆம் முனிவரே தாங்கள் சொல்வது பொல் எங்களால் எலியைக் கொல்வது சாத்திய மில்லை போலும். ஒருவேளை அந்த எலி மந்திரம் தெரிந்த எலி போல அதான் எங்களால் பிடிக்க முடியவில்லை என்றான்.  முனிவர் காவலாளி களைப் பார்த்து காட்டுக்கு போய் அல்லது பக்கத்து ஊருக்கு சென்று அங்கு ஏதாவது பூனை ஒன்று இருந்தால் பிடித்து வாருங்கள் என்று கட்டளை யிட்டார். 

காவலாளிகள் நோஞ்சான் போல் இருந்த பூனை ஒன்றை பிடித்து வந்தார்கள்.அரசனுக்கு சிரிப்பு தாங்கவில்லை.எங்கள் பூனைஎங்கே இந்த நோஞ் சான் பூனை எங்கே என்று சிரித்தான். மக்களும் உடன் சேர்ந்து சிரித்தார்கள். அதுவரையிலும் எலியும் இங்கும் அங்கும் சுற்றித் திரிந்தது. முனிவர் எலி நடமாட்டம் இருக்கும் பகுதியில் அந்தப் பூனையை விட சொன்னார். பூனை சற்று நேரம் அமர்ந்தது. அடுத்த நொடி அங்கு துள்ளி திரிந்த எலியை விரட்டியது. கொஞ்சநேரம் போக்கு காட்டிய எலி சட்டென்று மாட்டிக்கொண்டது. அரசனுக்கு பயங்கர ஆச்சர்யம். எப்படி இது சாத்தியமா யிற்று என்றான்.

முனிவர் காரணம் அந்தப் பூனை பசியால் இருந்தது. அதற்கு ஆகாரம் தேவையாக இருந்தது. அதன் தேவைக்கு எவ்வளவு வேண்டுமானாலும் உழைக்க தயாராக இருந்தது. உங்கள் பூனைகள் கொன்று பெருத்த பூனைகள் அவைகளுக்கு பசியின் அருமை தெரிந்திருக்கவில்லை. அதனால் ஓடி சென்று தன்னுடைய தேவையை நிறைவேற்றிக்கொள்ளும் குணம் அவர்களுக்கில்லை. அரசே தேவை என்று வந்தால் தான் அதை நோக்கி ஓட நினைப்போம் என்றார்.

ஆம் ஆன்மிகப் பாதையில் பயணிக்க நினைக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உங்களை சிறந்த ஆன்மிகத்தில் திளைக்க வைக்காது. இறை வனது பாதத்தை பற்றியே இருக்க வேண்டும் என்னும் ஆன்மிக பசி உங்களிடம் இருந்தால் தான் இறைவனை அடையும் வழியை தேடுவதற்கு மனமும் விரும்பும். ஈடுபாடும் உண்டாகும்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP