திருமூல நாயனார் -1

கூடுவிட்டு கூடு பாயும் வித்தையைக் கற்றி ருந்த சிவயோகியான சுந்தரநாதர் தம்முடைய உடலைத் துறந்து மூலனின் உடலுக்குள் உட் புகுந்தார். உறக்கத்திலிருந்து எழுவதைப் போல திருமூலனராக எழுந்தார். சுற்றி நின்ற ஆநிரை களுக்கு...

திருமூல நாயனார் -1
X

சைவ சமய அடியார்களுள் மூத்தவர்கள் திருமூல நாயனாரும்,காரைக்கால் அம்மையாரும் ஆவார்கள். நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடி யேன் என்று சுந்தரமூர்த்தி நாயனார் அன்பு பொங்க கூறியிருக்கிறார். பதிணென் சித்தர்களுள் இவரும் ஒருவர்.

கயிலை மலையின் காவலராக விளங்குபவர் நந்திபகவான். வருடைய அருளைப் பெற்று சிவயோகிகள் இருந்தார்கள். அவருள் ஒருவர் சுந்தர நாதர் என்று அழைக்கப்படும் சிவயோகி. அவருக்கு பொதிகை மலையில் இருக்கும் அகத்தியரைச் சந்திக்க வேண்டும் என்னும் ஆவல் இருந்தது.

ஒருநாள் எம்பெருமானின் பாதக்கமலங்களைப் பணிந்து வேண்டி பிறகு பொதிகை மலைக்குபயணப்பட்டார். திருக்கேதாரம், நேபாளம், ஸ்ரீ சைலம் வழியாக திருக்காளகத்தி வந்து திருவாலங்காடும் காஞ்சி சிவத்தலங்களைத் தரிசித்து பிறகு திருவாடு துறை தலத்துக்கு வந்தார்.பார்வதி தேவி யார் பசு வடிவம் கொண்டு தவமியற்றிய புண்ணியத்தலம் இது. இங்கு எம்பெருமான் பசுபதியாக பக்தர் களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருந் தார்.

பசுபதியின் காட்சியில் மனம் கட்டுண்டு அங்கேயே சிறிதுகாலம் தங்கியிருக்கமுடிவுசெய்தார்.அங்கு அருகில் இருக்கும்தலங்களுக்கு சென்று தரி சிக்க விரும்பிய சுந்தரநாதர் காவிரி ஆற்றங்கரை வழியாக பயணப்பட்டார். மூலன் என்னும் இடையன் ஒருவன் ஆநிரைகளை மேய்த்துக் கொண் டிருந்தான். ஆநிரைகள் மேல் அன்புகொண்டிருந்த மூலனின் மேல் ஆநிரைகளையும் அளவுக்கதிகமான அன்பை சொரிந்தன.

பசுக்களை அடிக்காமல் துன்புறுத்தாமல் கதிரவனின் வெப்பம் தாக்காமல் பாதுகாப்பான இடங்களில் மேய்ச்சலுக்கு விடும் மூலனின் மீது பசுக்க ளுக்கு இருந்த அன்பு தூய்மையானதாக இருந்தது. பசுக்கள் மேய்வதும் சிறிது நேரம் மூலன் அருகில் வந்து அவனை நாவால் தடவி கொடுப்பது மாய் இருந்ததைக் கண்ட சுந்தரநாதர் அங்கேயே நின்றார். சிறிது நேரம் கழித்து மூலன் அசைவற்று விழுந்தான்.

அவனிடம் அன்பு காட்ட வந்த பசுக்கள் மூலனின் அசைவற்ற உடம்பைக்கண்டு அழுதன.கண்ணீர் சொரிந்தன. சுற்றி நின்று அவனை தடவி கொடு த்தன. செய்வதறியாது அங்கும் இங்கும் கூட்டமாக ஓடிய பசுக்கள் மூலன் எழும்பாது போனால் தாங்களும் உயிர்துறக்க கூடும் என்ற எண்ணம் சுந்தரநாதருக்கு தோன்றியது. எம்பெருமானின் அருளால் இவைகளை உயிர்த்துறக்க விடமாட்டேன்என்று கூறி மூலனின் அருகில் சென்றார்.

கூடுவிட்டு கூடு பாயும் வித்தையைக் கற்றிருந்த சிவயோகியான சுந்தரநாதர் தம்முடைய உடலைத் துறந்து மூலனின் உடலுக்குள் உட்புகுந்தார். உறக்கத்திலிருந்து எழுவதைப் போல திருமூலனராக எழுந்தார். சுற்றி நின்ற ஆநிரைகளுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.சுற்றி சுற்றி வந்து திரு மூலரை நக்கி கொடுத்தன. துள்ளிக்குதித்தன். அவர் அருகில் அமர்ந்து உராய்ந்து சந்தோஷத்தை வெளிப்படுத்தின.மூலன் வடிவில் இருந்த சுந்தர நாதனும் ஆநிரைகளை மகிழ்ச்சியாக தட்டிக்கொடுத்தார்.

அந்தி சாயும் நேரம்வந்தது. ஆநிரைகள் தத்தம் வீடுகளுக்கு செல்ல அவற்றின் பின்னே திருமூலரும் சென்றார். திருமூலர் தன்னுடைய ஞான திரு ஷ்டியால் மூலனின் குடும்பம் பற்றி அறிந்தார். அதனால் அவன் வீட்டுக்கு செல்லாமல் தனியாக ஒரு இடத்தில் அமர்ந்தார். இப்போது என்ன செய் வது என்று தனிமையில் அமர்ந்து சிந்திக்க தொடங்கினார். அதன் பிறகு... நாளை பார்க்கலாம்...


newstm.in

newstm.in

Next Story
Share it