திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் -3

ஞானசம்பந்தரார் பாடிய மாதர் மடப்பிடி என் னும் பதிகத்துக்கு யாழ் மீட்டமுடியாமல் திணறினார் பாணர். இதில் உங்கள் கருவியால் என்ன வாசிக்க இயலுமோ அதை வாசியுங்கள் என்று ஆசிர்வதித்தார் ஞான சம்பந்தர்..

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் -3
X

திருஞான சம்பந்தர் தன் தந்தையுடன் திருப்பாச்சிலாச்சிரமத்தை அடைந்தார். அங்கு மழவன் ஒருவன் தன் மகளுக்கு ஏற்படும் வலிப்பு நோயைத் தீர்க்கும் பொருட்டு ஆலயத்தில் விட்டு சென்றிருந்தான். அச்சமயம் திருஞான சம்பந்தர் வந்ததைக் கேள்வியுற்றவர் எப்படியும் தன் மகளது பிரச் னையை ஞான சம்பந்தர் தீர்த்து வைப்பார் என்று ஒடி வந்தார். சம்பந்தராரரிடம் தன்னுடைய பிரச்னையைக் கூறினார்.

ஞான சம்பந்தர் மழவனின் மகளின் வலிப்பு நோய் நீங்க வேண்டும் என்று எம்பெருமானிடம் துணிவளர் திங்கள் என்னும் பதிகத்தைப் பாடினார். பக்தனின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்த எம்பெருமானால் வலிப்பு நோய் நீங்கப்பெற்று துயிழெந்தாள் மழவன் மகள். அவளை வாழ்த்திய ஞான சம்பந்தர் அங்கிருந்து கொங்கு நாட்டுக்கு சென்றார்.

கொங்குநாட்டில் மக்களை பாடாய் படுத்திக்கொண்டிருந்த பனியில் இருந்து காக்க எம்பெருமானை நினைத்து அவ்வினைக்கு இவ்வினை என்று தொடங்கும் பதிகத்தைப் பாடி கொடும்பனி சேராமல் மக்களை காத்தார். கொங்கு நாட்டு மக்களின் பேரன்பை பெற்ற ஞான சம்பந்தர் திருப்பட்டீ ஸ்வரரைக் காண விரும்பினார்.

அங்கு வந்து எம்பெருமானை வணங்கியவர் பிறகு திருவாவடுதுறை வந்து சில காலம் அங்கு தங்கியிருந்தார். சீர்காழியில் எம்பெருமானுக்கு வேள்வி நடத்த பொன்னும் பொருளும் வேண்டும் என்று தந்தையார் கேட்க, ஞான சம்பந்தர் இறைவனின் திருப்பணியை குறித்து பதிகம் பாடி னார். இறைவனும் பீடத்தில் அள்ள அள்ள குறையாத பொன்னைக் கொடுத்து அருளினார். மகிழ்வோடு அதைப் பெற்றுகொண்ட ஞான சம்பந்தரா ரின் தந்தை பிள்ளைக்கு விடைகொடுத்து வேள்வி நடத்தும் பொருட்டு சீர்காழி அடைந்தார்.

திருவாவடுதுறையில் தங்கியிருந்த ஞான சம்பந்தரரின் பதிகங்களுக்கு பாணர் யாழ் இசைக்க மக்கள் இசை வெள்ளத்தில் மகிழ்ந்தார்கள். பாணர் யாழ் மீட்டுவதால் தான் ஞானசம்பந்தரது பாடல்கள் சிறப்பு பெறுகின்றன என்று அவரது உறவினர்கள் அவரிடம் கூற இதைக் கேட்டு அதிர்ந்தார் பாணர். பிறகு எம்பெருமானிடம் மக்களுக்கு தாங்கள் அமுதூட்டிய ஞானசம்பந்தரராரின் அன்பை உலகுக்கு தெரிவிக்க வெண்டும் என்று வேண்டி னார்.

அதன் பிறகு ஞானசம்பந்தரார் பாடிய மாதர் மடப்பிடி என்னும் பதிகத்துக்கு யாழ் மீட்டமுடியாமல் திணறினார் பாணர். இதில் உங்கள் கருவியால் என்ன வாசிக்க இயலுமோ அதை வாசியுங்கள் என்று ஆசிர்வதித்தார் ஞான சம்பந்தர். பாணர் முன்பு போல் யாழை மீட்டவே தங்களது தவறை உணர்ந்தார்கள் அவரது உறவினர்கள். பிறகு ஞான சம்பந்தரரது பாதங்களில் வீழ்ந்து மன்னிப்பும் கோரினார்கள்.

பிறகு எம்பெருமானைத் தரிசிக்கும் பொருட்டு ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு பதிகங்களைப் பாடி மகிழ்ந்தார் ஞான சம்பந்தர். ஒரு முறைதிரு மருகல் ஆலயத்துக்கு வரும் போது கோயில் மடத்தில் வணிகன் ஒருவன் தன்னுடைய காதலியோடு அங்கு ஓடி வந்து தங்கியிருந்தான். எதிர் பாராத விதமாக அவனை பாம்பு தீண்டியது. நடப்பதைக் கண்டு அழுத வணிக பெண்ணின் பார்வையில் ஞான சம்பந்தர் தெரிந்தார். ஓடிப்பொய் நடந்ததைக் கூறி அழுதாள் அந்தப் பெண். இவளது கதையில் உருகிய ஞான சம்பந்தர் சடையாய் எனுமால் என்னும் திருப்பதிகத்தைப் பாடி அந்த வணிக மகனை உயிர்த்தெழச்செய்தார். அனைவரும் அதிசயமாக நடந்ததைப் பார்த்தார்கள்.சம்பந்தர் அவர்கள் இருவரையும் ஆசிர்வதித்து மண வாழ்க்கையில் ஈடுபட்டு மகிழ்ச்சிகரமாக வாழுங்கள் என்று ஆசிர்வதித்தார்.

அதன் பிறகும் சிவ வழிபாட்டை தொடர விரும்பிய திருஞானசம்பந்தர் திருபுகலூர், திருவாரூர் என்று தரிசனம் செய்தார். இவரும் அப்பரடிகளும் கால்நடையாகவே வந்து எம்பெருமானை வணங்கினார்கள். இறைவன் அளித்த முத்துப்பல்லக்கை விடுத்து தன்னுடன் கால்நடையாக வந்து இறைவனைத் தரிசிப்பது அப்பரடியாருக்கு கவலை அளித்தது. இது பற்றி அவரிடம் கூறியதற்கு தாங்கள் மட்டும் நடந்து வரும்போது நான் எப்படி மகிழ்வோடு பல்லக்கில் பவனி வரமுடியும் என்று கேள்வி எழுப்பினார் ஞான சம்பந்தர். பிறகு இருவரும் சிவத்தலங்களை தரிசித்த வண்ணம் இருந்தார்கள்.


newstm.in


newstm.in

Next Story
Share it