Logo

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் -9

அம்மங்கையின் கரம்பிடித்து வலம்வரும்போது இம்மங்கையுடன் சிற்றின்பத்தில் ஈடுபட்டு வாழ் வதை விட இருவரும் எம்பெருமானை சரண டைவதே பேரின்பத்தின் வழி என்று எண்ணி னார். உற்றார் உறவினர்களோடு...
 | 

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் -9

சிவநேசரின் மகளான பூம்பாவையின் சாம்பலையும், எலும்பையும் வைத்திருந்த குடத்தை எடுத்துவர சொல்லிய சம்பந்தர் திருப்பதிகம் பாடி பூம் பாவையை உயிர்த்தெழச்செய்தார். என்னுடைய மனம் போல் என் மகளை தாங்கள் மணந்துகொள்ள வேண்டும் என்று கோரினார்.

அரவம் தீண்டிய உன் மகள் அரனார் அருளால் மீண்டு எழுந்திருக்கிறார். அதனால் அவள் என் மகளுக்கு ஒப்பாவார். அதை ஏற்றுக்கொண்ட சிவ நேசரும் தனது மகள் பூம்பாவையுடன் அவரை வணங்கி எழுந்து திரும்பினார்கள். பூம்பாவை கன்னி மாடம் திரும்பி சிவனடியாரை எண்ணி இறு தியில் அவரது பாதத்தை அடைந்தாள். சம்பந்தர் அதன் பிறகு திருவான்மியூர், திருக்கழுக்குன்றம், அச்சிரப்பாக்கம், திருவரசிலி, திருப்பனங்காட் டூர் போன்ற தலங்களைத் தரிசித்து மிண்டும் தில்லையை அடைந்தார்.

தில்லை அந்தணர்கள் வரவேற்க, நடராசனைத் தரிசித்து, அங்கிருந்து அவர் பிறந்த ஊரான சீர்காழிக்கு வந்தடைந்தார். அவரைக் காண திருமுருக நாயனார், திருநீலநக்க நாயனார், அன்பு அடியார்கள் சீர்காழிக்கு வரவே அவர்களை வரவேற்ற சம்பந்தர் அவர்களோடு திருத்தோணியப்பரைத் தரிசித்தார்கள். இந்நிலையில் வேத நெறியின் முறைப்படி அவருக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று பெற்றோரும் உற்றோரும் அவரிடம் அனுமதி கேட்க உலக நியதிப்படி இதை மறுப்பதற்கில்லை என்றாலும் என்னால் தற்போது இல்லற வாழ்வில் ஈடுபட முடியாது என்று மறுத்தார். ஆனால் வைதிக நெறிப்படி வாழ்க்கை வாழ வேண்டும் என்று வற்புறுத்தவே இறுதியில் ஒருவாறு சம்மதித்தார்.

திருப்பெருண நல்லூரில் வாழும் நம்பியாண்டார் நம்பியின் திருமகளே திரு ஞான சம்பந்தருக்கு உடையவர் என்று தீர்மானித்தார்கள். திருமண நாள் குறிக்கப்பட்டது. உற்றார்களும் உறவினர்களும் சுற்றத்தார்களும் சிவபாதவிருதயர் இல்லத்தில் கூடினார்கள். ஊர் முழுக்க விழாக்கோலம் பூண்டிருந்தது. திருமணத்தைச் சிறப்பாக நடத்துவதற்கு திட்டமிட்டார்கள்.விதவிதமான அலங்காரங்களும், தோரணங்களும் பூமாலைகளும் வீதி முழுக்க தொங்கவிடப்பட்டன. திருமண நாள் நெருங்கியது.

திருமணத்தன்று வைகறைப் பொழுதில் எழுந்த சம்பந்தர் தோணியப்பரைத் தரிசித்த பிறகு திருமணச் சடங்கை மேற்கொண்டார். அங்கிருந்து திரு நல்லூர்ப் பெருமணம் ஊருக்கு வரலானார். மங்கள வாத்தியங்கள் முன்னும் பின்னும் வர மக்கள் எல்லையில் வரவேற்க நின்றிருந்தார்கள் . அவரை வரவேற்று வீதியில் அழைத்து செல்லும் போது சுந்தரத் தமிழில் பாட்டிசைத்து எம்பெருமானின் அருளைப் பெற்று மகிழ்ந்து பாடியபடி கிளம்பினார்.

திருமணக்கோலத்தில் அலங்கரிக்கப்பட்டார். நறுமண மிக்க சந்தனத்தை மேனியில் பூசி, முத்துக்கள் அலங்கரித்த மாலையைப்போட்டு, முறைப் படி வேதங்கள் ஓதி பூணூலை அணிவித்தார்கள். திருநீறு பூசி வெண்பட்டாடை ஆபரணங்கள் அணிந்து தெய்வ கடாட்சமாய் ருத்ராட்சமாலையை எம் பெருமானை நினைத்து அணிந்துகொண்டார்.

இந்த சமயத்தில் நம்பியாண்டார் நம்பியின் அருந்தவப்புதல்விக்குக் காப்பு கட்டி வேத சடங்குகளை செய்தார்கள். குலமகளுக்கு வைரமும் வைடூ ரியமும் சேர்த்து நவரத்னம் பதித்த உயர் ரக விலைமதிப்பில்லா ஆபரணங்களால் அலங்காரப்படுத்தினார்கள். குறித்த நேரத்தில் இருவரும் மண  வறையில் எழுந்தருளினார்கள். நம்பியாண்டார் ஞானசம்பந்தரின் திருக்கரங்களில் மங்கள நீரை வார்த்து தமது மகளை தாரை வார்த்துக் கொடுத் தார்.

சம்பந்தர் அம்மங்கையின் கரம்பிடித்து வலம்வரும்போது இம்மங்கையுடன் சிற்றின்பத்தில் ஈடுபட்டு வாழ்வதை விட இருவரும் எம்பெருமானை சரணடைவதேபேரின்பத்தின் வழி என்று எண்ணினார். உற்றார் உறவினர்களோடு  திருமண பெருங்கோயிலை வந்து, சிவனை மனதில் நினைத்து அவரது திருவடியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டி  நல்லூர்ப் பெருமணம் என்று தொடங்கும் திருப்பதிகம் ஒன்றைப் பாடினார்.

அப்போது விண்வழியே எம்பெருமானின் அசரீரி கேட்டது. நீயும் உன் மனைவியும் உன் சுற்றமும் எமது ஜோதியில் கலந்தடையுங்கள் என்று மூவுலகிலும் தம் ஒளியால் விளங்கும் வண்ணம் சோதிலிங்கமாக காட்சியளித்து அருள்புரிந்தார். அந்த சோதியிலேயே ஓர் வாயிலையும் காட்டி அருள்புரிந்தார். காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி என்று தொடங்கும் நமச்சிவாய திருப்பதிகத்தைப் பாடி மகிழ்ந்த சம்பந்தர் சுற்றி நின்ற அனைவ ரையும் கண்டு பிறவிபயன் நீங்க அனைவரும் இதில் கலந்து விடுங்கள் என்றார்.

எல்லோரும் எம்பெருமானின் திருமந்திரத்தை வானுயர உச்சரித்து சம்பந்தரின் திருவடியைத் தொழுது ஜோதியில் ஐக்கியமானார்கள். அவர்க ளைப் பின் தொடர்ந்து தன் மனைவியுடன் வலம் வந்த சம்பந்தரும் ஜோதியில் கலந்தார். பிறகு ஜோதியின் நுழைவாயில் மூடிக்கொண்டது. தேவர்களும், ரிஷிகளும், சிவகணங்களும் எம்பெருமானைப் போற்றி துதித்தார்கள்.

தேவியின் முலைப்பாலை சிவஞானத்தோடு உண்டு எம்பெருமான் அருள் பெற்று உலகம் முழுதிலும் சைவத்தை உயர்வு கொள்ள வைத்த திரு ஞான சம்பந்தரை அவர்தம் மனைவியோடு எம்பெருமான் அவர் அருகிலேயே இருக்க செய்தார். சிவாலயங்களில் வைகாசி மாதம் மூலம் நட்சத் திரத்தில் இவருக்கு குருபூஜை  சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 

 

newstm.in


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP