சிறுதொண்ட நாயனார் தொடர்ச்சி

ஐந்து வயதுக்கு குறையாமல் மிகாமல் அங்கத்தில் ஊனமில்லாமல் இருக்க வேண்டும். அது மட்டுமல்ல தாய் குழந்தையை அழுத்தி பிடிக்க தந்தை அரிந்து பிழையில்லாமல் செய்த உணவை மட்டும் தான் யாம் உண்போம்...

சிறுதொண்ட நாயனார் தொடர்ச்சி
X

சிவனிடம் மிகுந்த பக்தியும் அன்பும் கொண்டிருந்த சிறுத்தொண்ட நாயனார் தினமும் சிவனடியார்களுக்கு அமுது படைக்காமல் உண்பதில்லை. ஒரு நாள் அடியார்கள் யாரும் தேடிவராத நிலையில் அடியார்களைத் தேடி இவரே சென்றும் காணமுடியாமல் வெறுமையுடன் திரும்பினார்.
மனைவி மகிழ்வுடன் அடியார் வந்ததயும் அவர் அத்திமரத்தில் காத்திருப்பதாகவும் சொல்ல அடியாரிடம் விரைந்து ஓடினார் சிறுத்தொண்ட நாயனார்.

அருகில் சென்று ஐயனே என்று அழைத்தார் கண்விழித்த பைரவ அடியார் நீர்தான் சிறுதொண்டரா என்று வினவினார். அடியேனை எம்பெருமா னின் அடியார்கள் அப்படித்தான் அழைப்பார்கள் ஐயா என்று தன்னடக்கத்தோடு பதிலுறுத்தார் சிறுத்தொண்டர்.

இன்று யாரையும் காண இயலவில்லையே என்று வருந்திய எமக்கு தங்களது வருகை மிதமிஞ்சிய மகிழ்ச்சியைத் தருகிறது என்றும் புன்னகையு டன் கூறியவர், தங்களது திருப்பாதங்கள் எமது இல்லத்தில் படவேண்டும் தங்களுக்கு அமுது அளித்து மகிழ்ந்திட நாங்கள் காத்திருக்கிறோம் என் றார். எனக்கு அமுது அளிக்க உன்னால் முடியாது. உன்னை காணவே இங்கு வந்தோம் என்றார் பைரவ அடியார்.

அப்படி சொல்லாதீர்கள் ஐயனே நீங்கள் வேண்டுவது யாதாயினும் அமுது படைத்து அளிக்க காத்திருக்கிறோம். அதனால் நீங்கள் வேண்டுவன என்ன என்று கூறுங்கள் என்றார் சிறுத்தொண்டர். நான் ஆறுமாதங்களுக்கு ஒருமுறை பசுவைக் கொன்று உண்பேன். இன்று தான் அந்த நாள். ஆனால் உன்னால் அமுதளிக்க முடியாது என்றார்.

என்னிடம் ஆநிரைகள் அதிகமாக இருக்கிறது. உங்களுக்கு வேண்டியது எது என்று கூறினால் நான் விரைந்து சென்று அமுது படைக்கிறேன் என் றார். பைரவர் சிரித்தார். நான் உண்ணுவது நரப்பசு. ஐந்து வயதுக்கு குறையாமல் மிகாமல் அங்கத்தில் ஊனமில்லாமல் இருக்க வேண்டும். அது மட்டுமல்ல தாய் குழந்தையை அழுத்தி பிடிக்க தந்தை அரிந்து பிழையில்லாமல் செய்த உணவை மட்டும் தான் யாம் உண்போம் என்றார் சிவனடி யார் வேடத்தில் வந்த சிவபெருமான். இதுவும் எனக்கு சிரமமல்ல. விரைவில் அமுது படைக்கிறேன் என்று சிறுத்தொண்டர் கூறி சென்றார்.

எதிர்பட்ட மனைவியிடம் நடந்ததைக் கூறினார். அவரும் யோசித்தார். எவ்வளவு பொன், பொருளை கொட்டி கொடுத்தாலும் பிறந்த பிள்ளையை அவர்களே அரிந்து அமுது படைக்க ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அதனால் நம் பிள்ளை சீராளனையே கறியமுது செய்து சிவனடியாரை மகிழ்விப் போம் என்றார் சிறுத்தொண்டர். நங்கையாரும் மகிழ்ந்து சம்மதித்தார்.

சிறுத்தொண்ட நாயனர் பாடசாலைக்கு சென்று சீராளா என்று அழைக்க கொஞ்சும் சலங்கை சலசலக்க மணியாய் நடந்துவந்தான் அழகு செல்வன் சீராளன். அவனை தூக்கி வைத்தப்படி வீட்டுக்கு வந்தார் சிறுத்தொண்டர்.வீட்டுக்கு வந்ததும் சீராளனைக் குளிப்பாட்டி தயார் நிலையில் கணவரி டம் தந்தார். பிறகு பிள்ளையின் இரண்டு கால்களையும் இறுக பிடித்துக்கொண்டார். பரமனின் அடியார்க்கு செய்தால் பரமனுக்கே செய்தது போல் ஆயிற்றே. அதனால் பரமனின் வைத்திருந்த அன்பில் எவ்வித உறுத்தலுமின்றி பிள்ளையின் தலையை அரிந்தார் சிறுத்தொண்டர்.

பிள்ளையின் தலைக்கறியை அடியார்க்கு ஆகாது என்று தனியாக வைத்து பிற பாகங்களைச் சமைத்து அமுது தயாராக இருப்பதாகவும் அடி யாரை அழைக்க வேண்டும் என்றும் நங்கையார் சிறுத்தொண்டரை அழைத்தார். சிறுத்தொண்டரும் விரைந்து சென்று அடியாரை அழைத்து வந்தார்.தாமதத்திற்கு மன்னிக்கவும் என்று சொல்லியபடி வீட்டுக்குள் வந்த பைரவ அடியாரின் பாதங்களைக் கழுவினார்.அவருக்கு பூஜை செய்து பிறகு அமுது செய்ய வேண்டும் என்று வேண்டினார்.

பைரவ அடியார் யாம் கூறியது போல் தானே சமைத்திருக்கிறீர்கள் என்றார். ஆமாம் தங்களுக்கு ஆகாது என்று தலைக்கறியை மட்டும் தவிர்த்து விட்டோம் என்றார் பதிவிரதையார். அதையும் நான் உண்பேன் எடுத்து வாருங்கள் என்றார்.நங்கையார் திகைக்கும் போது அதையும் நான் தயார் செய்துவிட்டேன் என்று அவரிடமிருந்த சந்தனத்தாதியார் கொண்டு வந்து வைத்தார்.

அடியாருக்கு அமுது படைப்பதில் எவ்வித குறையும் இல்லை என்று மகிழ்ந்த நங்கையார் தலைக்கறியைப் பரிமாறினார். சிவனடியாருடன் தான் நான் உண்பது என்றார் பைரவ அடியார். வெளியில் தேடிய சிறுத்தொண்டர் அங்கனம் யாரும் இல்லை என்று சொல்லவே உம்மை விட அடியார் வேறு யார் நீரும் என்னுடன் அமுது உட்கொள்ள வேண்டும் உமது மைந்தனும் வந்தால் தான் நாம் அமுது உண்பேன் என்றும் திட்டவட்டமாக கூறிவிட்டார்.

என்ன செய்வது என்று திகைத்த இருவரும் வாயிலில் நின்று சீராளா! சீராளா! அமுது படைக்க சிவனடியார் அழைக்கிறார் என்று உரக்க அழைத் தார்கள். அவர்கள் எதிரில் துள்ளிக் குதித்து மகிழ்ச்சியுடன் ஓடிவந்தான் சீராளன். அடியாருக்கு அமுது படைக்கலாம் என்று இருவரும் மகிழ்ந்து வீட்டுக்குள் செல்ல அடியாரைக் காணவில்லை.

ஐயோ அடியாரைக் காணவில்லையே என்று அதிர்ந்து திரும்பியவர் கண்களுக்கு கறி அமுதும் இல்லை என்பது புரிந்தது. என்ன மாயம் என்று வீட் டுக்கு வெளியே வந்து பார்த்தார்.எம்பெருமான் அம்மையோடு காட்சி தந்தார். உமது தொண்டை உலகறியவே யாம் இப்படி செய்தோம் என்ற எம் பெருமான் அவர்களை திருக்கயிலையில் தம்முடன் இருக்க ஆசிர்வதித்தார்.

சிவாலயங்களில் சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தன்று குருபூஜை கொண்டாடப்படுகிறது.


newstm.in

newstm.in

Next Story
Share it