வியர்வை பெருக்கெடுக்க தரிசனம் தரும் அம்மன்...

குள்ளமாக இருப்பவர்களாக இருந்தாலும் இறைவனை தரிசிக்கலாம். உயரமாக இருப்பவர்களும் இறைவனைத் தரிசிக்கலாம். ஏனெ னில் இறைவனே பக்தர்களின் உருவங் களுக்கேற்ப ஏற்ப உயரமாகவோ, குள்ளமா கவோ உயர்ந்தும், குறைந்தும் தரிசனம் தந்து பக்தர்களை...

வியர்வை பெருக்கெடுக்க தரிசனம் தரும் அம்மன்...
X

வெப்பம், குளிர்ச்சி உணர்வுகள் எல்லாம் உலகில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உண்டு. மனிதர்களுக்கு சற்றே அதிகமுண்டு. வெப்ப மான காலங்களில் நீர் நிலைகளைத் தேடியும், குளிர்ச்சியான காலங்களில் உஷ்ணத்தை தேடியும் ஓடிக்கொள்கிறோம். ஆனால் அம்மனுக்கும் வியர்வை பொங்கி வழியும் அதிசயத்தலம் ஒன்று உண்டு. பூஜை செய்யும் போது மெல்லியத் துணியால் அம்மனின் திருமுகத்தைத் துடைத்தும் கூட வியர்வை நிற்காமல் இருப்பது பக்தர்களை ஆச்சரியத்துக்குள்ளாக்குகிறது.

இறைவனைத் தரிசிக்க செல்லும்போது கருவறையில் இருக்கும் இறைவனைக் கண்ணார தரிசனம் செய்ய வேண்டும் என்பதே அனைவரது விருப்பம். குள்ளமாக இருப்பவர்களாக இருந்தாலும் இறைவனை தரிசிக்கலாம். உயரமாக இருப்பவர்களும் இறைவனைத் தரிசிக்கலாம். ஏனெ னில் இறைவனே பக்தர்களின் உருவங்களுக்கேற்ப ஏற்ப உயரமாகவோ, குள்ளமாகவோ உயர்ந்தும், குறைந்தும் தரிசனம் தந்து பக்தர்களை மெய் சிலிர்க்கவைப்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது.

இப்படி மேற்கண்ட இரு ஆச்சர்யங்களையும் அளிக்கும் அதிசய ஆலயம் ஒன்றுதான். தேனி மாவட்டம் சின்னமனூரில் அமைந்துள்ள பூலா நந் தீஸ்வரர் திருக்கோயில்தான் இந்த இரண்டு அதிசயங்களையும் உள்ளடக்கியிருக்கிறது. இத்தலத்தில் அமைந்திருக்கும் பூலாநந்தீஸ்வரர் சுயம்பு வாய் தோன்றியவர் இவரைத் தரிசிக்க வந்தவர் திருமால் என்கிறது இத்தல வரலாறு.

சுரபி நதியின் கீழ்புறம் சுயம்புவாக முளைத்த லிங்கம் ஒன்று உள்ளது. இதனுடைய இடபாகத்தில் எம்பெருமானின் திருவிளையாடலால் தேவ லோக கற்பகத்தரு முட் பூலாமரமாக முளைத்தது. இந்தப் பகுதியை ஆண்டமன்னனுக்கு ஆயன் பால் கொண்டுவரும்போது இந்த முட் பூலா மரத் தின் கீழே தடுக்கி விழுந்ததில் பால் கொட்டியது. தினமும் இதே போல் பால் கொட்டியதில் ஆவேசமடைந்த ஆயன் அந்த மரத்தை வெட்டினான். மரத்தில் வெட்டு பட்ட போது அங்கிருந்த லிங்கத்தில் குருதி வழிந்தோடியது.

அப்போது காட்சி தந்த இறைவன் பூலாமரத்தை கற்பகத்தருவாக்கி பக்தர்கள் வேண்டியதை நினைத்து வழிபட்டால் அவர்கள் வேண்டிய வரத்தை கற்பகத்தருவாகிய பூலாமரம் கொடுக்கும் என்றார். அதனால் இத்தலத்தின் விருட்சமாக முட் பூலாமரம் மூலவருக்கு இடப்பக்கம் அமைந்திருக் கிறது.

இந்த ஊரில் பிறப்பவர்களுக்கு முக்தி கிடைக்கும் என்கிறார்கள். இந்த ஊரில்இறப்பவர்களின் எலும்புகள் சுரபி நதியில் விழுந்தால் கல்லாக மாறி விடும் என்பது ஐதிகம். இங்குள்ள மரத்தில் நாகலிங்க பூ பூக்கிறது. பூவின் நடுவில் லிங்கம் போன்றும் அதற்கு ஆதிசேஷன் போல் குடையாக லிங்கத்தின் மீது இருப்பதும் மற்றுமொரு ஆச்சர்யம். இங்கிருக்கும் அம்பாள் சிவகாமி அம்மையார் என்றழைக்கப்படுகிறார். அம்மனின் முகம் வியர்த்தப்படி இருப்பதும், மூலவர் பக்தர்களின் உயரத்துக்கேற்ப காட்சிதருவதும் காணக்கிடைக்காத தரிசனம்.

அனைத்துப் பேறுகளையும் அருளும் இத்தலத்துக்கு செல்ல இன்னும் தாமதிக்கலாமா?

newstm

newstm.in

Next Story
Share it