சுந்தரமூர்த்தி நாயனார் -3

சுந்தரார் புன்னகை சிந்தினார். அவரே மாயம் போல் என்னென்னவோ கூறுகிறார். அவையில் இருப்பவர்களே குழப்பத்தில் இருக்கும் போது குற்றம் சுமத்தப்பட்ட நான் என்ன செய்ய முடியும் என்றார்.

சுந்தரமூர்த்தி நாயனார் -3
X

முதியவர் தம்மை அடிமை என்றதும் அதற்கு காரணமாக ஓலை ஒன்று உண்டு என்று சொன்னதும் ஆரூரார் அவரை விரட்டி பிடித்து அவர் கையி லிருந்த ஓலையை பறித்து கிழித்து விட்டார். முதியவரோ தமக்கு நியாயம் கிடைக்காத என்று குமுறினார். அதன் பிறகான தொடர்ச்சி...

முதிய வேதியரின் கைகளிலிருந்த ஓலையைக் கிழிதெறிந்ததைத் தவறு என்று உணர்ந்த சுந்தரரார், நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால் உங்கள் வழக்கை உங்கள் ஊரிலேயே உங்கள் சபை முன்னாலேயே தீர்த்துக்கொள்ளலாம். அதற்கு நான் மனப்பூர்வமாக சம்மதிக்கிறேன் என்றார். உடனே வேதியர் தோற்றத்தில் இருந்த எம்பெருமான் அப்படி வா என்னுடைய வழக்கை எமது ஊரிலேயே நடத்திக்கொள்கிறேன். உன்னிடம் நான் பறிகொடுத்த ஓலை நகல் தான். அசலை என்னுடைய ஊரிலேயே வைத்திருக்கிறேன். அந்த அவையோர் முன்னிலையில் அதைக் காண்பித்து நீ என் அடிமைதான் என்பதை நிரூபிக்கிறேன். நீர் என் பின்னால் வாரும் என்று தடியை ஊன்றியபடி தள்ளாடி நடந்தார்.

அவரைப் பின் தொடர்ந்து சுந்தரராரும், அவையில் இருந்த உறவினர்களும், பெரியோர்களும் சென்றார்கள். சுபமாக மகிழ்ச்சியில் திளைத்திருந்த திருமண விழா சோகத்தில் மூழ்கியது. அனைவரும் வழக்காடு மன்றத்துக்கு சென்றார்கள்.முதியவர் வெண்ணெய் நல்லூரை அடைந்ததும்அவை யைக் கூட்டினார். அவையினரிடம் இந்நாவலூரான் எனக்கு அடிமை. இவனது பாட்டனார் அதை எழுதி என்னிடம் கையெழுத்திட்டிருக்கிறார் என் றார்.

அவையில் இருந்தவர்கள் நகைத்தார்கள். அந்தணரை அடிமையாக எழுதிக்கொடுப்பதா? அகிலம் முழுக்க தேடினாலும் இப்படி ஒரு வழக்கு இருக் குமா என்பது அதிசயமே என்றார்கள். முதியவரோ முரண்டு பிடித்தார். தள்ளாத வயதிலும் உம்மிடம் நியாயம் கிடைக்கும் என்று நினைத்துஅவை யைக் கூட்டியிருக்கிறேன். எனக்கும் இவன் பாட்டனாருக்கும் ஏற்பட்ட உடன்பாட்டில் தான் இவன் எனக்கு அடிமையாக்கப்பட்டிருக்கிறான். இந்த வழக்கை கேலியாக கருதாமல் எனக்கு தகுந்த நியாயத்தைச் சொல்லுங்கள் என்றார்.

இப்போதுதானே வழக்கை சமர்பித்திருக்கிறீர்கள். அவர் தரப்பில் என்ன சொல்கிறார் என்றும் பார்ப்போம் என்றவர்கள் ஆரூராரை நோக்கி இவர் தங்களை அடிமை என்கிறார். ஆனால் நீங்கள் எதுவும் உரைக்காமல் அமைதியாக இருக்கிறீர்களே என்றார்கள். சுந்தரார் புன்னகை சிந்தினார். அவரே மாயம் போல் என்னென்னவோ கூறுகிறார். அவையில் இருப்பவர்களே குழப்பத்தில் இருக்கும் போது குற்றம் சுமத்தப்பட்ட நான் என்ன செய்ய முடியும் என்றார்.

எல்லோருக்கும் ஆரூராரின் மீது நம்பிக்கை இருந்தது. ஆதி சைவரான இவர் ஒரு போதும் முறை தவறி நடக்கமாட்டார் என்னும் உறுதியும் இருந் தது. ஆனால் வழக்கு என்று முதியவர் ஒருவர் வரும்போது என்ன செய்ய முடியும். அதனால் வேறு வழியின்றி மீண்டும் முதியவரை நோக்கி இவர் உங்கள் அடிமை என்பதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். மேலும் ஒப்பந்த ஓலையில் சாட்சிகளும் கையெழுத் திட்டிருக்கும் வகையில் ஏதாவது ஆதாரம் கையில் இருக்கிறதா என்று கேட்டார்கள்.

முதியவருக்கு புன்னகை பூத்தது. அப்படி கேளுங்கள். முன்பு நான் இவனிடம் காண்பிக்க எடுத்துச்சென்ற ஓலையை இவன் கிழித்துவிட்டான். நல்ல வேளை அது நகலாக இருந்தது. அசல் ஓலையை என்னிடம் தான் வைத்திருக்கிறேன். அதைப் பத்திரமாக யார் கண்ணிலும் படக்கூடாது என்று. ஓலையை மீண்டும் இவன் கிழித்துவிடாமல் அவையில் இருப்போர்கள் தான் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று கூறினார்.

அவையில் இருப்போர்களும் ஆதாரத்தைச் சமர்பியுங்கள். நாங்கள் அவற்றைக் கூர்ந்து ஆராய்ந்து நியாயத்தின் பக்கம் தீர்ப்பளிக்கிறோம் என்றார் கள். முதியவரும் ஓலையை எடுத்து ஆரூரார் பக்கம் பார்வையை வீசியபடி அவையில் இருப்போர்களிடம் அந்த ஓலையை சமர்பித்தார்.

உண்மையில் ஓலையில் என்ன இருந்தது. ஆரூரார் அடிமை என்றா? நாளை பார்க்கலாம்.

newstm.in

newstm.in

Next Story
Share it