நவக்கிரக  வழிபாட்டில் நமசிவாயத்தை மறந்துவிட வேண்டாமே !

நமசிவாயத்தைப் பற்றி கொள்ளுங்கள்.. நவக்கிரகங் கள் நன்மையையே அளிக்கும்.... நவக்கிரக வழிபாட்டில் நமசிவாயத்தை மறந்துவிட வேண்டாமே.

நவக்கிரக  வழிபாட்டில் நமசிவாயத்தை மறந்துவிட வேண்டாமே !
X

“உங்கள் ஜாதகத்தில் சனி திசை நடக்கிறது. சனி பகவான் உங்களுக்கு இன்னல்களைத் தராமல் போக மாட்டார்.” ”ஜாதகத்தில் கேது திசை நடப்பதால் வீட்டில் கெட்ட காரியம் நடந்தே தீரும்..” ”சுக்கிரதிசை நடக்கிறது. ஆனால் இடை யில் ராகு குறுக்கிடுவதால் நல்லது நடக்க வாய்ப்புகள் குறைவுதான்” இப்படி ஜாதகங்களை அலசி பலனை சொல்பவர்கள் பரிகாரத்தையும் சொல்ல தவறு வதில்லை.

உங்கள் ஜாதகத்தில் இந்த திசை நடப்பதால் இத்தத்திருத்தலத்திற்கு சென்று அங்கிருக்கும் நவக்கிரகங்களில் உங்களுக்குரிய பகாவனை வழிபட்டு அபிஷேகம் செய்யுங்கள்... குறைகள் நிவர்த்தியாகும். இப்படித்தான் 100 க்கு 90 பேர் கிரகங்கள் சரியில்லை என்று நவக்கிரகத்தை சுற்றிக்கொண்டிருக்கிறோம்.

ஆளும் ஆதிப்பிரான் அடிகள் அடைந்து ஏத்தவே
கோளு நாளுவை போயறுங் குற்றமில்லார்களே-
என்று திருஞான சம்பந்தர் கூறியிருக்கிறார்.

உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தையும் காக்கும் பொறுப்பைக் கொண்ட சர்வேஸ்வரனையே நாம் வணங்கும் கோள்கள் வணங்கி பெருமை அடைந் திருக்கின்றன. அப்படியிருக்கும் போது நாம் முக்காலமும் அறிந்த சர்வேஸ் வரனை விடுத்து நவக்கிரகங்களை மட்டுமே காப்பாற்றும் அபயமாக சுற்றலாமா என்கிறார். ஏனெனில் சிவப்பெருமானின் கட்டளை ஏற்று தான் நவக்கிரகங்கள் செயல்படுகிறது...

சூரியன், செவ்வாய், சந்திரன், புதன், குரு, சுக்ரன், சனி, இராகு, கேது என ஒன்பது நவக்கிரகங்களும் சிவபெருமானை வழிபட்ட தலம் பற்றிய விளக்கங் களை புராண நூல்களில் காணலாம்.

பிறப்பு இறப்பும் ஆதியும் அந்தமும் முதலும் முடிவும் இல்லாத ஒருவர் அகிலத்தை ஆளும் நாயகன் மட்டுமே. அதனால் தான் அவர் முழு முதற் பரம் பொருள் என்று அழைக்கப்படுகிறார். அபயம் என்று சரணடையும் பக்தர்களைக் காக்கும் கடவுளாய் இவர் இருக்கும்போது நவக்கிரகங்களிடம் தீங்கு செய்ய வேண்டாம் என்று அபயம் வேண்டலாமா என்பதே இவரது கருத்து..

நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமசிவாயத்தை நம்பியோருக்கு என்று சொல்லியிருக்கிறார்கள். நமசிவாயத்தைப் பற்றி கொள்ளுங்கள்.. நவக்கிரகங் கள் நன்மையையே அளிக்கும்.... நவக்கிரக வழிபாட்டில் நமசிவாயத்தை மறந்துவிட வேண்டாமே.

newstm.in

Tags:
Next Story
Share it