சக்தி பீடங்கள் உருவான கதை...

சிவபெருமான் வீரபத்திரரை அழைத்து அங்கி ருப்பவர்களை துவம்சம் செய்ய உத்தரவிட்டார். மனைவியை இழந்ததால் ஆவேசம் கொண்டு தாட் சாயணியின் உடலை எடுத்துக்கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார். சினத்தால் மிகுந் திருந்த சிவனின் கோபத்தை தணிக்க யாராலும் இயலவில்லை. அச்சத்தில் எல்லோரும் பதுங் கினார்கள்...

சக்தி பீடங்கள் உருவான கதை...
X

பெண்ணாக பிறப்பதே பெரும் பேறு தான். பெண்கள் இல்லாத வீடு அரண்மனையாக இருந்தாலும் வெற்றுக்கூடு. பெண்கள் சக்தி மிக்கவர்கள். அவர்களின்றி ஓர் அணுவும் அசையாது. இறைவனில் கூட சக்தியில்லையேல் சிவமில்லை என்று சொல்கிறார்கள். பெண் இல்லையென்றால் பிறவிகளே இல்லை. ஆனால் அத்தகைய போற்றுதலுக்கு காரணமான பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் தான் எத்தனை எத்தனை. பூலோகமாக இருந்தாலும், தேவலோகமாக இருந்தாலும் பெண்களுக்கான பிரச்னைகளுக்கு பஞ்சமே இல்லை.

தந்தைக்கும் கணவனுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு தவிக்கும் பெண்கள் நம் வீட்டில் கூட இருக்கலாம்.ஆனால் கயிலாயத்தில் தாட்சாயணி தந்தை தட்சணுக்கும், கணவன் பரமேஸ்வரனுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு திணறவில்லையா? தேவி பார்வதி நிகழ்த்திய திருவிளையாட லின் பயனாக உருவானது தான் சக்தி பீடங்கள். ஏன் உருவாயின என்று பார்க்கலாமா?

தட்சண் என்பவர் மிகப்பெரிய வேத சாஸ்திர விற்பன்னர். யாகங்களும், வேள்விகளும் செய்து பல நன்மைகளை பெற்றவர். ஈசனின் மனைவியா கிய தாட்சாயணியை மகளாக பெறும் பாக்கியத்தைப் பெற்றவர். ஒரு முறை மிகப்பெரிய யாகம் ஒன்றை நடத்த முடிவு செய்தார். யாகத்துக்கு பூலோகத்திலும், தேவலோகத்திலும் வசித்த அனைவரையும் அழைத்திருந்தார். முனிவரையும், யோகிகளையும், ரிஷிகளையும் அழைத்த அவர் ஊழ்வினை காரணமாக அறிவு மங்கினார்.

வேள்வியில் அளிக்கும் அவிர் பாகத்தை அக்னி மூலமாக சிவபெருமானுக்கு அர்ப்பணிப்பது வழக்கம். அதை அறிந்தும் யாகத்துக்கு சிவபெருமா னை அழைக்கவில்லை. தந்தையாகிய தட்சண் நடத்தும் யாகத்துக்கு தன்னுடைய கணவருக்கு அழைப்பில்லை என்றதும் பொங்கி எழுந்தாள் தாட்சாயணி. சிவபெருமான் தடுத்தும் பார்வதி தேவி தட்சணை மீறி யாகத்துக்கு சென்றாள்.

தன்னுடைய மகள் என்றும் பாராமல் தட்சண் அவமதிக்கவும் யாகத்தின் பலன் கிட்டாமல் போகட்டும் என்று சபித்துவிட்டு தட்சண் தந்த உடல் இனி எனக்கு வேண்டாம் என்று கூறி தாட்சாயணி அந்த யாகத்தீயில் விழுந்து தன்னுடைய உயிரை போக்கிகொண்டாள். இதைக் கேள்விப்பட்ட சிவபெருமான் வீரபத்திரரை அழைத்து அங்கிருப்பவர்களை துவம்சம் செய்ய உத்தரவிட்டார். மனைவியை இழந்ததால் ஆவேசம் கொண்டு தாட் சாயணியின் உடலை எடுத்துக்கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார்.

சினத்தால் மிகுந்திருந்த சிவனின் கோபத்தை தணிக்க யாராலும் இயலவில்லை. அச்சத்தில் எல்லோரும் பதுங்கினார்கள். அச்சமயம் சிவப்பெரு மானின் உக்கிரத்தைத் தணிக்க மகாவிஷ்ணு தமக்கையின் உடலை துண்டுகளாக்கும் விதத்தில் தன்னுடைய சக்ராயுதத்தை சுழற்றினார். அதன் பிறகே சிவபெருமான் சாந்தமடைந்ததாக புராணங்கள் கூறுகிறது.தாட்சாயணியின் சிதறிய உடல்கள் 51 துண்டுகளாக சிதறி பூலோகத்தில் விழுந் தது. அப்படி விழுந்த இடங்களே சக்தி பீடங்களாக மாறின. இதை கந்த, மச்ச, பத்ம புராணங்களில் 70 என்றும், 108 என்றும் கூறுகிறார்கள்.

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். இன்று ஆடி மாதம் முதல் நாள். அன்னையின் சக்தி பீடங்களைத் தொடர்ந்து பார்க்கலாம். இந்தியாவில் அமைந்துள்ள 51 சக்தி பீடங்களில் தமிழ்நாட்டில் மட்டும் 18 சக்தி பீடங்கள் அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சக்தி பீடங்கள் கட்டுரை வழியாக அம்மனைத் தரிசிக்க காத்திருங்கள்..


newstm.in


newstm.in

Next Story
Share it