கடவுளையும் விட்டு வைக்காத சனி பகவான்

ஒரு முறை சனி பகவான் தேவலோகம் சென்றார். சனிபகவான் நம்மை தேடி வருகிறாரோ என்று பயந்து இந்திரசபையில் உள்ளவர்களும், தேவர்களும் ஓடி ஒளிந்துகொண்டார்கள். அதைக் கண்ட சனி பகவான் பயப்பட வேண்டாம் உங்களை ஒன்றும் செய்ய மாட்டேன் என்று சிரித்தப்படி மேலும் நடந்தார். எதிர்பட்ட நாரதரும் சனியைக் கண்டு ஓடலாமா? நிற்கலாமா? என்று அஞ்சியபடி அலைபாய்ந்தார்.

கடவுளையும் விட்டு வைக்காத சனி பகவான்
X

சனி பிடித்தால் சகலமும் போகும் என்று புலம்புகிறோமே. சனி மனிதர்களை மட்டுமல்ல அண்டத்தை ஆளும் சர்வேஸ்வரனையும் விட்டு வைக்கவில்லை. சனீஸ்வரனைக் கண்டால் பூலோகத்தில் மட்டுமல்ல தேவலோகத்திலும், கயிலாயத்திலும், வைகுண்டத்திலும் இருப்பவர்களும் கூட அலறி ஓடுவார்கள்.

ஒரு முறை சனி பகவான் தேவலோகம் சென்றார். சனிபகவான் நம்மை தேடி வருகிறாரோ என்று பயந்து இந்திரசபையில் உள்ளவர்களும், தேவர்களும் ஓடி ஒளிந்துகொண்டார்கள். அதைக் கண்ட சனி பகவான் பயப்பட வேண்டாம் உங்களை ஒன்றும் செய்ய மாட்டேன் என்று சிரித்தப்படி மேலும் நடந்தார். எதிர்பட்ட நாரதரும் சனியைக் கண்டு ஓடலாமா? நிற்கலாமா? என்று அஞ்சியபடி அலைபாய்ந்தார். அவரையும் கண்டு சிரித்தப்படி கடந்துவிட்டார் சனிபகவான்.

கடவுளையும் விட்டு வைக்காத சனி பகவான்

வைகுண்டம் சென்றார். அங்கிருப்பவர்களும் அலறியடித்தப்படி ஓட அவர்களையும் ஒரு புன்சிரிப்புடன் கடந்துசென்றார். எல்லோரும் சனி பகவானைப் பார்த்துகொண்டிருந்ததால் நம்மை பிடிக்கவில்லை என்ற நிம்மதி ஏற்பட்டது. அதே நேரம் இவர் யாரை தேடி ஓடுகிறார் என்றும் சந்தேகம் வந்தது. இறுதியாக கயிலாயத்துக்குள் அடியெடுத்துவைத்தார். அனைவருக்கும் ஆச்சர்யம் அப்படி யாரை தேடி வருகிறார் சனிபகவான் என்று.

பரம்பொருளுக்கு தெரிந்துவிட்டது. சனிபகவான் தம்மை தான் பிடிக்க வருகிறார் என்று. உடனே விஷ்ணு பகவானிடம் ஆலோசித்தார். சனி வரும் போது தாங்கள் இங்கே இல்லாவிட்டால் போதும் அவர் சென்றுவிடுவார் என்று சொன்ன விஷ்ணு, சிவபெருமானை பாறைகள் நிறைந்த குகைப்பகுதிக்கு அழைத்து சென்று குகையின் உள்ளே அமர்த்தி விட்டு குகையை மூடிவிட்டு சென்றார்.

கடவுளையும் விட்டு வைக்காத சனி பகவான்

விஷ்ணுவிடம் எதிர்பட்ட சனிபகவான் எம்பெருமானை கண்டீர்களா என்று கேட்டார். இல்லையே நான் அவரை பார்த்து நாட்கள் ஆகிவிட்டனவே என்று நில்லாமல் சென்றார் விஷ்ணு. குகைக்குள் இருந்த சிவபெருமானுக்கு சக்தியில்லாமல் தனித்திருப்பது கவலையாக இருந்தது. என்ன செய்வது என்று அங்கேயே அமர்ந்து தியானத்தில் மூழ்கி விட்டார். வருடங்கள் கடந்தது. தியானத்திலிருந்து விழித்த சிவபெருமான் குகையின் வாசலை திறந்து குகையிலிருந்து வெளியே வந்தார். அவரை வரவேற்க தேவர்களும், நாரத மகரிஷியும், பிரம்மாவும், விஷ்ணுவும் வந்திருந்தார்கள். சற்றுதள்ளி சனிபகவான் புன்னகையோடு நின்று கொண்டிருந்தார்.

கடவுளையும் விட்டு வைக்காத சனி பகவான்

சனிபகவானைக் கண்டதும் அதிர்ந்த சிவபெருமான் நீ இப்போது என்னை பிடிக்க முடியாது. அந்தக் காலம் கடந்துவிட்டது. நான் உன்னிடமிருந்து தப்பித்துவிட்டேன் என்றார் புன்னகையோடு. உடனே சனீஸ்வரன் ஐயனே நான் உங்களைப் பிடித்ததால் தான் யாருமின்றி சக்தியுமின்றி தனித்து தாங்கள் குகைக்குள் இத்தனை வருடங்கள் இருந்தீர்கள். தாங்கள் தானே என் பணியை தவறாது செய்ய கட்டளை பிறப்பித்தவர். இதனை மீளமுடியுமா என்றார். இறைவன் என்றும் பாராமல் என்னையும் பிடித்து ஆட்டுவித்ததால் என்னுடைய பட்டப்பெயரான ஈஸ்வரனை உனக்கு அருளுகிறேன் என்றார் அன்று முதல் சனீஸ்வரன் என்று அழைக்கப்படுகிறார்.

அண்ட சராசரங்களையும் காக்கும் முதன்மையானவனையே சக்தியிடமிருந்து பிரித்து ஆட்டுவித்த சனிபகவான் சாதாரண மனித பிறவியாக நம்மை விட்டுவைப்பாரா என்ன? சனிக்கிழமை தோறும் சனிபகவானை வழிபடுங்கள். வழிபாடு துன்பத்தை குறைத்து தைரியத்தைக் கொடுக்கும்.

newstm.in

Tags:
Next Story
Share it