பஞ்சபூதங்களையும் அடக்கிய சாய்பாபா

பஞ்சபூதங்களும் சாய்பாபாவின் ஆணைக்கு கட்டுபடும் என்பதற்கு இந்த நிகழ்வுகளே உதாரணம். ஒரு நாள் மாலை நேரத்தில், ஷீரடியில் பயங்கரமாக புயல் வீசியது. கருமேகங்களால் வானம் திரையிடப்பட்டிருந்தது. காற்று பலமாக வீச தொடங்கியது. மேகங்கள், கர்ஜித்து மின்னல் பளிச்சிட்டது. மழை வெள்ளமாய் பொழிய தொடங்கியது. சிறிது நேரத்தில் அவ்விடம் வெள்ளக்காடாகியது.

பஞ்சபூதங்களையும் அடக்கிய சாய்பாபா
X

பஞ்சபூதங்களும் சாய்பாபாவின் ஆணைக்கு கட்டுபடும் என்பதற்கு இந்த நிகழ்வுகளே உதாரணம். ஒரு நாள் மாலை நேரத்தில், ஷீரடியில் பயங்கரமாக புயல் வீசியது. கருமேகங்களால் வானம் திரையிடப்பட்டிருந்தது. காற்று பலமாக வீச தொடங்கியது. மேகங்கள், கர்ஜித்து மின்னல் பளிச்சிட்டது. மழை வெள்ளமாய் பொழிய தொடங்கியது. சிறிது நேரத்தில் அவ்விடம் வெள்ளக்காடாகியது. ஷீரடியில் சர்வ ஜந்துக்களும், பறவைகளும், மிருகங்களும், மனிதர்களும் பயங்கர பீதி அடைந்து திரளாக மசூதியில், தஞ்சமடைந்தனர். ஷீரடியில் பல கிராம தேவதைகள் இருக்கின்றன. ஆனால், அவைகளில் எவையும் அவர்களின் உதவிக்கு வரவில்லை. எனவே, அவர்கள் எல்லாரும் தங்களது பக்தியின்பால் தி பற்று மீதுரும் தங்களது கடவுளான சாய்பாபாவை அவர் குறுக்கிட்டுப் புயலைத் தணிக்க வேண்டினர். சாய்பாபா மிகவும் மனதுருகினார். சாய்பாபா மசூதியிலிருந்து வெளிப்போழ்ந்து, அதன் விளிம்பில் நின்று, பெருத்த இடு முழக்கம் போன்ற குரலில் புயலை நோக்க , " நிறுத்து, உன்சீற்றத்தை நிறுத்தி அடங்கியிரு", என கூறி னார். சில நிமிடங்களில் மழை குறைந்து, காற்று வீசுவது நின்று, புயலும் அடங்கியது.

பின்னர், சந்திரன் வானத்தில் உதயமாகி , மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து, வீட்டுக்கு திரும்பினர். மற்றொரு முறை மத்தியான நேரத்தில், மசூதியில் துனியில் உள்ள நெருப்பு பிரகாசமாக எரியத் தொடங்கியது. அதனுடைய ஜுவாலை மசூதியின் விட்டத்தை அடைந்தது.
மசூதியில் அமர்ந்திருந்த மக்களுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. தண்ணீரை அதன் மீது உற்றியோ, அல்லது தீ ஜுவாலையை தணிப்பதற்கு வேறெதுமவும் செய்யும்படியாகவே, சாய்பாபாவை, கேட்க அவர்களுக்குத் துணிவு வரவில்லை. ஆனால், சிறிது நேரத்தில் சாய்பாபா, என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை உணர தலைப்பட்டார். தமது "ஸட்கா" வை எடுத்து முன்னுள்ள ஒரு தூணின் மீது ஓங்கி யடித்து, " கீழிறங்கு, அமைதியாய் இரு " என்றார். ஒவ்வொரு தடியின் அடிக்கும், ஜுவாலை கீழிறங்க தொடங்கி சில நிமிடங்களில், குறைந்து துனி அமைதியாகவும் சாதாரணமாக வும் ஆகியது. இதுவே நமது சாய்பாபாவின் அற்புதம். தம்முன் வீழ்ந்து பணிந்து சரணாகதியடைந்த எந்த மனிதரையும், அவர்ஆசீர்வதிக்கிறார். தினந்தோறும் பக்தியுடன், நம்பிக்கை யுடனும் இருப்பவர்களுக்கு, எல்லா கேடுகளிலிருந்து விடுப்படுவார்கள். சாய்பாபாவின் மேல் அன்புடையவராக இருந்தால் வெகு விரைவில் கடவுள் காட்சி பெறுவார். எல்லா ஆசைகளும் நிறைவேறி முடிவில் உயர்நிலை எய்துவார்.

டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்

newstm.in

Tags:
Next Story
Share it