சாய்பாபா திருப்தியுடன் இருந்தார்

சீரடியில் தர்கட் என்று பெண்மணி இருந்தாள். அவள் வீட்டில் மதிய உணவு தயாராகி கொண்டுஇருந்த து. தர்கட் குடும்பத்தினர் உணவை சாப்பிடுவதற்காக அமர்ந்துகொண்டு இருந்தனர். அப்பொழுது அங்கு ஒரு நாய் வந்து அதற்கு பசியாய் இருக்கிறது என்று இதை

சாய்பாபா திருப்தியுடன் இருந்தார்
X

சீரடியில் தர்கட் என்று பெண்மணி இருந்தாள். அவள் வீட்டில் மதிய உணவு தயாராகி கொண்டுஇருந்த து. தர்கட் குடும்பத்தினர் உணவை சாப்பிடுவதற்காக அமர்ந்துகொண்டு இருந்தனர். அப்பொழுது அங்கு ஒரு நாய் வந்து அதற்கு பசியாய் இருக்கிறது என்று இதை கவனித்த தர்கட் உடனே எழுந்திருந்து ஒரு ரொட்டித் துண்டை விட்டெறியவும் அது, மிகுந்த சுவையுணர்வோடு அதைக் கவ்வி அதனை விரைவாக விழுங்கிவிட்டது. பிற்பகல் அவள் மசூதிக்குச் வந்து கொண்டு இருந்தாள்.அங்கு அமர்ந்து இருந்த சாய்பாபா, தர்கட்யிடம் "நான் பெருமளவு திருப்தியுறும் வகையில் எனது பிராணன்கள் யாவும் நிறைவு பெற்றன. இவ்விதமாக எப்போதுமே நடப்பாயாக. இது உன்னை நன்னிலையில் வைக்கும். மசூதியில் அமர்ந்து கொண்டு பொய் பேச மாட்டவே மாட்டேன் என்றார் சாய்பாபா.

என்னிடம் இவ்விதமாக இரக்க கொள்வாய். முதலில் பசியாய் இருப்போர்க்கு உணவு கொடுத்துப் பின் நீ உண்ணுவாயாக இதை மட்டும் நன்றாகக் கவனித்து கொள்" என்று கூறினார். முதலில் அவளால் அதன் பொருளை உணர இயவில்லை. எனவே அவள்," எங்ஙனம் நான் தங்களுக்கு உணவு அளித்திருக்க முடியும்? நானே உணவுக்கு மற்றவர்களைச் சார்ந்து பணம் கொடுத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் "எனக் கூறினாள். இதற்கு சாய்பாபா, அந்த கவர்ச்சிமிகு ரொட்டியை உண்டு நான் மனப்பூர்வமாகத் திருப்தியடைந்தேன்.நான் இன்னும் ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கிறேன். உணவு வேளைக்கு முன்னர் நீ பார்த்து ரொட்டி அளித்த நாயானது என்னுடன் ஒன்றியதாகும். இவ்வாறாக மற்ற உயிரினங்களும் என்னுடன் ஒன்றானவைகளாகும்.நான் அவைகளின் உருவத்தில் உலாவிக் கொண்டு இருக்கிறேன். என்னை இவ்வனைத்துப் படைப்புயிர்களிலும் பார்க்கிறவன் எனக்கு உகந்தவன். எனவே துவைதத்தையும், பேதத்தையும் ஒழித்து இன்று செய்ததைப் போல் எனக்குச் சேவை செய்" என்று கூறினார் சாய்பாபா. அவள் உருகி அவளது கண்கள் பனித்து, தொண்டை அடைத்து அவளது மகிழ்ச்சி எல்லையற்றதாக ஆகியது .


டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்

newstm.in

Tags:
Next Story
Share it