தீக்குள் கையை விட்ட சாய்பாபா!

ஒருநாள் சாய்பாபா துணிக்கருகில் அமர்ந்திருந்தார். அவரின் சூட்சம தேகமோ எங்கோ விரைந்து கொண்டிருந்தது. திடீரென்று, சாய்பாபா துணியின் நெருப்பு ஜூவாலைக்குள் தமது கைகளைச் செலுத்தினார். இதை கண்டு திடுக்கிட்டு பக்தர்கள் சாய்பாபாவின் அருகில் வந்தனர்.

தீக்குள் கையை விட்ட சாய்பாபா!
X

ஒருநாள் சாய்பாபா துணிக்கருகில் அமர்ந்திருந்தார். அவரின் சூட்சம தேகமோ எங்கோ விரைந்து கொண்டிருந்தது. திடீரென்று, சாய்பாபா துணியின் நெருப்பு ஜூவாலைக்குள் தமது கைகளைச் செலுத்தினார். இதை கண்டு திடுக்கிட்டு பக்தர்கள் சாய்பாபாவின் அருகில் வந்தனர். மாதவராவ் என்பவர் ஒடிச்சென்று சாய்பாபாவின் இடுப்பில் தமது இரு கரங்ளை வைத்து அவரைத் தூக்கி பின்னால் கொண்டு வந்தார்.

அவர்களிடம் தீயில் கைவிட்டதற்கான காரணத்தை சாய்பபாபா விளக்கி கூறினார். “சற்று தூரத்ததில் இருந்த கிராமம் ஒன்றில் கொல்லன் ஒருவனுடைய மனைவி உலைக் களத்தில் இருந்த துருத்தில் (நெருப்பு) வேலை செய்து கொண்டிருந்தாள். அவள் கணவன் திடிரென்று அவளை அழைத்தான். அவன் குரல் கேட்டு மனைவி எழுந்து அவசரமாக ஒடினாள். இடுப்பில் குழந்தை இருப்பதையும் மறந்து ஒடியபோது குழந்தை உலைக் களத்தில் நழுவி விழுந்து விட்டது. “ இந்த காட்சி சாய்பாபாவின் கண்களில் படவே சட்டென்று உலைக் களத்ததில் தன் கரங்களை விட்டு அக்குழைந்தையைக் காப்பாற்றி விட்டார். சூட்சம தேகம் சூக்கும் தேகத்தில் சேர்ந்த உடன், சாய்பாபாவின் கரங்களில் நெருப்பின் காயம்பட்டன. "எனது கரங்கள் வெந்து போனதைப் பற்றி நான் பொருட்படுத்தவில்லை. அந்த கொல்லனின் குழந்தையின் உயிர் காக்கப்பட்டதை எண்ணி மகிழ்வடைகிறேன்" என்றார் சாய்பாபா.

இதை கேள்விப்பட்ட நானா சாகேப் சந்தோர் மும்பையில் உள்ள புகழ்பெற்ற “டாக்டரான பரமானந்த்” என்பவரை அழைத்து வந்து சாய்பாபாவிற்கு சிகிச்சை அளிக்க அனுமதிக்குமாறு சாய்பாபாவை வேண்டினார். சாய்பாபா மறுத்து விட்டார். சாய்பாபாவிற்கு தொண்டு செய்யும் “குஷ்டரோகியான பாகோஜி சந்தியா” சாய்பாபாவிற்கு நேர்ந்ததை அறிந்து பதற்றமுடன் ஒடி வந்தார். அவரது கரங்களில் நெய் கிண்ணமும் இலையும் இருந்தன. அவரின் அன்புக்குக் கட்டுப்பட்ட சாய்பாபா அவரது கரங்களால் வெந்த காயங்களுக்கு நெய் தடவி இலையை வைத்துக்கட்ட அனுமதித்தார். இறுதி வரை குஷ்டரோகியான பாகோஜியைத் தினமும் தமது கை காயத்திற்கு மருந்து போட அனுமதித்தார் சாய்பாபா.

தீக்குள் கையை விட்ட சாய்பாபா!
டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்
EMAIL: venkatraman.ramasundaram@gmail.com

newstm.in

Next Story
Share it