ஆன்மீக செய்தி –மஹாலக்ஷ்மியின் அருள் பெற்ற மருதாணி

மருதாணியை விரும்பாத பெண்களே இருக்க முடியாது. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் மற்றும் பண்டிகைகளின் போது பெண்கள் தவறாமல் மருதாணி இட்டுக் கொள்ளும் வழக்கம் நமது மத கலாச்சாரத்தில் உள்ளது. மருதாணி ஒரு மங்கல பொருள். ஸ்ரீமகாலஷ்மியை மனதில் நினைத்துக் கொண்டு கையில் அணிந்துக்கொண்டால், எந்த துன்பங்களும் நெருங்காது என்பது ஆன்றோர் வாக்கு.
 | 

மருதாணி எப்படி திருமகளின் மனதில் இடம் பிடிதாள்?.இராவண யுத்ததிற்குப் பின்,ராமர் சீதாதேவியை பத்திரமாக மீட்டார். அப்போது அன்னை சீதாதேவி ஸ்ரீஇராமரிடம், “இங்கு நான் இருந்த ஒவ்வொரு நாளிலும் என் கஷ்டங்களை காது கொடுத்து கேட்ட இந்த மருதாணி செடிக்கு ஏதாவது நாம் நன்மை செய்ய வேண்டும்.” என்று கூறி மருதாணி செடியிடம், “உனக்கு என்ன வரம் வேண்டும்.” என கேட்டாள்.“எங்களுக்கு எதுவும் வேண்டாம். இன்று உன் முகத்தில் மகிழ்ச்சி தெரிகிறது. உன்னை போல அனைத்து பெண்களும் மகிழ்ச்சியாக இருந்தாலே எங்களுக்கும் மகிழ்ச்சிதான். அது போதும்.” என்றது மருதாணி செடி.

அதற்கு சீதை, “உன்னதமான உன் குணத்திற்கு நான் ஒரு வரம் தருகிறேன். உன்னை யார் பூஜிக்கிறார்களோ அல்லது யார் உன்னை கைகளில்வைத்துக்கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு சகல நன்மைகள் கிடைக்கும். அவர்களின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.” என்ற வரத்தை தந்தார் சீதாபிராட்டி.

இன்றும் வடஇந்தியர்கள் திருமணத்தில் மெஹந்தி விழா ஒரு முக்கியமான அம்சமாக விளங்குகிறது.இதனால் மகாலஷ்மியின் அருளாசி மணமகளுக்கும், மருதாணி விழாவில் கலந்துக்கொள்ளும் பெண்களுக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம்.பண்டிகை மற்றும் வெள்ளிகிழமை போன்ற சுப நாட்களில் மருதாணியை ஸ்ரீமகாலஷ்மியை மனதில் நினைத்துக் கொண்டு கையில் அணிந்து, தாயாரின் அருளாசியைப் பெறுவோம்.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP