கடவுளின் வாகனங்கள் பற்றி அறிவோமா? 

ஹிந்து மதத்தில், ஒவ்வொரு இறைவனுக்கும், அவர்களுக்கென தனித்த வாகனம் உள்ளது. ஒரே இறைவனுக்கு, பல வாகனங்களும் உள்ளன. இந்த வாகனங்கள் மரத்தினாலும், உலோகங்களினாலும் செய்யப்பட்டு, வாகன மண்டபம் என்ற கோவிலின் ஒரு பகுதியில் வைக்கப்படுகின்றன.
 | 

கோவில் திருவிழாக்களின் போது, உற்சவர் இந்த வாகனங்களில் வீதியுலா வருகிறார்.

கடவுளும், வாகனங்களும் பற்றிய விளக்கம்:

சிவன் - காளை
விஷ்ணு - கருடன்
சுப்ரமணியன் - மயில், 
கணபதி - மூஞ்சூறு
ஐயப்பன் - புலி
இந்திரன் - வெள்ளை யானை
மன்மதன் - தேர்
ரதி தேவி - அன்னம்
துர்க்கை - சிங்கம்
திருமால் – கருடன்
சண்டிகேஸ்வரர் - குதிரை
சனீஸ்வரர் – காக்கை
ஐயனார் – யானை

இவற்றைத் தவிர பத்துநாட்கள் நடைபெறும் விழாக்காலங்களில், உற்சவர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் திருவுலா வருதலும் உண்டு. 
இவற்றில் கற்பக மரம், சூரிய பிரபை, சந்திரப் பிரபை போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.
இது போல் ஹீந்து சமயப் புராணங்களில் திசைக்காவலர்கள் ஒவ்வொருவருக்கும், தனித்தனியாக வாகனம் உள்ளது.

இந்திரன் - வெள்ளை யானை
வருண பகவான் - மகரம்
வாயு பகவான் - மான்
எமன் - எருமைக்கிடா
அக்னி பகவான் - ஆட்டுக்கிடா
குபேரன் - குதிரை
ஈசானன் - ரிசபம்
நிர்ருதி - சவம்
 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP