நமி நந்தி அடிகள் நாயனார் -1

சமணர்களின் இழிவானவார்த்தையைக் கேட்டு என்னால் எதுவும் செய்ய இயலாமல் போனதே. இதைக் கேட்கவா எனக்கு செவிகள் அளித்தீர்கள் என்று கதறினார். இனி யாது செய்வேன். அடியே னுக்கு...

நமி நந்தி அடிகள் நாயனார் -1
X

சிவனடியார்கள் சித்தத்தை சிவன்பால் வைத்து வாழ்ந்தவர்கள் சிவனடியார்கள். ஒவ்வொருவரும் சிவத்தொண்டை புரிவதையையே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்தார்கள். இந்த குறிக்கோளுக்காக தமது உயிரையும் விட துணிந்தவர்கள். இந்த 63 நாயன்மார்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொண்டினை செய்து எம்பெருமானின் பாதங்களைப் பற்றி சரணடவைந்தவர்கள்.

எம்பெருமானுக்கு திருவிளக்கு ஏற்றும் பணியை தலையாய கடமையாக செய்த கலியநாயனார், கணம்புல்ல நாயனார் வரிசையில் இன்று நாம் பார்க்கவிருப்பது நமிநந்தி அடிகள் நாயனார். திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில்அமைந்துள்ளது ஏமப்பேறூர். இங்கு அந்தணர் குலத்தில் பிறந்தவர் நமிநந்தி அடிகள். நாள்தோறும் எம்பெருமானுக்கு விளக்கேற்றும் பணியில் ஈடுபட்டு மகிழ்வுற்றிருந்தார்.

ஒருமுறை திருவாருர் கோயிலின் இரண்டாம் மதில் சுவருக்கு அருகேயிருந்த அரநெறியப்பரைச் தரிசிக்க சென்றார். மாலைநேரம் என்பதால் இருள் சூழ தொடங்கியது. விளக்கில் எண்ணெய் இன்றி மங்கலான வெளிச்சத்தைக் கொடுத்தது. அங்கு விளக்கை ஏந்திவைக்க விரும்பினார். தமது வீட்டுக்கு சென்று விளக்கு எரிக்க நெய்கொண்டு வருவதற்குள் பொழுது சாய்ந்துவிடும் என்று எண்ணியவர், அங்கு கோயிலின் அருகில் இருந்த ஒரு வீட்டுக்கு சென்று விளக்கேற்ற நெய் இருந்தால் தாருங்கள் என்று கேட்டார். அப்போது திருவாரூரில் அதிகம் சமணர்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர் நெய் கேட்டதும் சமணர்கள் வாழ்ந்த வீடு. இவர் நெய் கேட்டதும் இவரைக் கண்டு ஏளனம் செய்தார்கள்.

கையில் கனல் ஏந்தி ஆனந்த தாண்டவம் ஆடும் உங்கள் இறைவனுக்கு வெளிச்சமும் விளக்கமும் தேவையா என்ன? கனல் ஒளி போதுமே. உங்கள் ஆண்டவனுக்கு அப்படியும் ஒளி வேண்டுமென்றால் அருகில் இருக்கும் குளத்துநீரை கொண்டு வந்து ஏற்ற வேண்டியது தானே…நீரில் தீபம் பிரகாசமாக எரியுமல்லவா என்று எள்ளி நகையாடினார்கள். சமணர்களின் கேலி வார்த்தையால் மனம் வருந்திய நமி நந்தி அடிகள் இறைவனிடம் தஞ்சமடைந்தார்.

அரநெறியப்பனே என்ன சோதனை..என்னால் தாங்க முடியவில்லையே.சமணர்களின் இழிவானவார்த்தையைக் கேட்டு என்னால் எதுவும் செய்ய இயலாமல் போனதே. இதைக் கேட்கவா எனக்கு செவிகள் அளித்தீர்கள் என்று கதறினார். இனி யாது செய்வேன். அடியேனுக்கு ஏதேனும் வழி காட்டுவீர் என்றார்.

அப்போது குளத்து நீரைக் கொண்டு வந்து அபிஷேகம் செய்வாய் என்று இறைவனின் அசரீரி கேட்டது. தாமதிக்காமல் நமி நந்தி அடிகள் ஆனந்தப் பெருக்கோடு தேவாசிரிய மண்டபத்தை நோக்கி அடுத்துள்ள உம்ம சங்கு தீர்த்தம் என்னும் திருக்குளத்தை நோக்கி ஓடினார். பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்தப்படி அங்கிருந்த நீரை கொண்டுவந்தார். மங்கலாக எரிந்த விளக்கொன்றில் நீரை விட்டார். எம்பெருமானின் அதிசயத்தை என்ன வென்று கூறுவது. நெய் விளக்கை விட பன்மடங்கு பிரகாசமாய் எரிந்த தீபம், கோயிலின் இருளை அகற்றி தெய்வீக ஒளியைக் கொடுத்தது.

எம்பெருமானே என்று மகிழ்ந்த நமிநந்தி அடிகள் மீண்டும் திருக்குளத்துக்கு ஓடிச்சென்று தண்ணீரை எடுத்து வந்து ஆலயங்களில் இருக்கும் அனைத்து விளக்குகளிலும் ஊற்றி விளக்கேற்றினார். ஆலயங்களைச் சுற்றியும் தீப ஒளி விளக்கின் வெளிச்சம் பிரகாசமாக எரிந்தது. நமி நந்தி அடிகளை ஆட்கொண்ட இறைவன் எல்லா குலமும் தமக்கு ஒன்றே சாதி மத பேதங்களைப் பார்ப்பது தவறு என்பதையும் உணர்த்தியதை நாளைப் பார்க்கலாம்.


newstm.in

newstm.in

Next Story
Share it