வீடு கட்ட உதவிய மகான்!

வங்காளி ஒருவர் நீண்ட நாட்களாக ஷீரடியிலேயே வசித்து வந்தார். அவருக்கு அங்கேயே ஒரு வீடு கட்டும் ஆசை உதித்திருக்கிறது . ஆனால் அதற்கு ரூ.20 ஆயிரம் தேவைப்பட்டது.

வீடு கட்ட உதவிய மகான்!
X

வங்காளி ஒருவர் நீண்ட நாட்களாக ஷீரடியிலேயே வசித்து வந்தார். அவருக்கு அங்கேயே ஒரு வீடு கட்டும் ஆசை உதித்திருக்கிறது . ஆனால் அதற்கு ரூ.20 ஆயிரம் தேவைப்பட்டது.

அவ்வளவு பணத்திற்கு என்ன செய்வது? என்று குழம்பினார். தன் ஆசை நிறைவேறாது போலும் என்ற கவலையுடன், தொடக்க காலங்களில் சாய்பாபா அமர்ந்திருந்த அதே வேப்ப மரத்தின் அடியில் கவலையுடன் அமர்ந்தார். சாய்பாபாவிடம் தன் ஆசையை நிறைவேற்றிவைக்குமாறு மனமுருக வேண்டினார். சற்று நேரத்தில் எழுந்து சாய்பாபா கோயிலுக்குச் சென்றார். கோயிலை கவலையுடன் வலம் வந்தார் அந்த வங்காளி .
அப்போது தான் அது நடந்தது! தான் பார்த்து வெகு நாட்களாகிப்போன நண்பர் ஒருவர், கோயிலில் வலம் வந்துகொண்டிருந்தார். வங்காளியிடம் குசலம் விசாரித்த அவர் ,"ஏதாவது பிரச்சனையா ? மிகவும் கவலையுடன் காணப்படுகிறாயே" என்று கேட்டார் அந்த நண்பர்.

அதற்கு அந்த நண்பர் "கவலைப்படாதே உனக்கு நான் உதவி செய்கிறேன்" என்று ஆறுதல் கூறியதுடன் அப்போதே முன் பணமாக ஒரு பெரும் தொகையையும் வங்காளியின் கையில் திணித்தார். கதிகலங்கிப் போனார் வங்காளி. இது கனவா அல்லது நனவா என்பதைப் புரிந்து கொள்ளவே கொஞ்ச நேரம் ஆகிப்போனது அடுத்த சில நாட்களில் மீதிப் பணத்தையும் வாக்களித்தது போல கொண்டுவந்து கொடுத்தார் அந்த நண்பர். அந்த வங்காளியும் சந்தோஷத்துடன் தான் நினைத்த மாதிரியே தனது வீட்டினைக் கட்டிமுடித்தார். அனைத்தும் சாய்பாபாவின் அனுக்கிரகத்தால் மட்டுமே.
வீடு கட்ட உதவிய மகான்!
டாக்டர். வி. ராமசுந்தரம்
ஆன்மீக எழுத்தாளர்
EMAIL: venkatraman.ramasundaram@gmail.com

newstm.in

Next Story
Share it