மதுரை மீனாட்சியா? சிதம்பரம் நடராசரா? ஆன்மிகம் உணர்த்தும் தத்துவம் என்ன..

உலகில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளும் ஆண், பெண் என்னும் கூட்டுக்குள் ஒன்றாக இயங்குகிறது. அதாவது இந்த அகிலமானது ஆண்,பெண் இருவரும் இணைந்த உலகமே...

மதுரை மீனாட்சியா? சிதம்பரம் நடராசரா? ஆன்மிகம் உணர்த்தும் தத்துவம் என்ன..
X

இறைவனை மனிதர்களோடு ஒப்பிட்டு பேச முடியுமா? ஆனால் இறைவனின் திருவிளையாடலால் பூலோகத்தில் மனித பிறவி எடுத்த கதைக ளையும், அவர்கள் மீண்டும் தங்கள் துணையை அடைய வேண்டி கடுமையாக விரதமிருந்து பூஜித்ததையும் நாம் புராண கதைகளில் படித்து அறிந் திருக்கிறோம்.

அதை மனதில் கொண்டுதான் பிறர் நம்மிடம் பேசும் போது உங்க வீட்ல யார் ஆட்சி. மதுரை மீனாட்சியா? அல்லது சிதம்பரம் நடராசனா என்று கேட்பார்கள். அதாவது வீட்டில் மனைவியின் கை ஓங்கியிருந்தால் அது மதுரை ஆட்சி. குடும்பத் தலைவனின் கை ஓங்கியிருந்தால் அது சிதம் பரம் நடராசனின் ஆட்சி என்று பொருள்.

அப்படியானால் மதுரை சுந்தரேஸ்வரரை விட மீனாட்சி அம்மன் தான் சக்தி வாய்ந்தவளா? சிதம்பரத்தில் வீற்றிருக்கும் சிவகாமியை விட நடரா சர் தான் முதன்மையானவரா? இரண்டுமே இல்லை என்கிறார்கள் ஆன்மிக பெரியோர்கள். ஆணும் பெண்ணும் சமம் என்பதை உணர்த்துவதால் தான் தன்னுள் பாதியை பெண்ணுருவமாகவும், மறுபாதியை ஆணுருவமாகவும் கொண்டு ஆணுக்குள் பெண் பெண்ணுக்குள் ஆண் இருவரும் ஒருவருக்கொருவர் சமமானவர்களே என்று அர்த்த நாரீஸ்வரர் தோற்றம் கொண்டிருக்கிறார் எம்பெருமான்.

மதுரை மீனாட்சியா? சிதம்பரம் நடராசரா? ஆன்மிகம் உணர்த்தும் தத்துவம் என்ன..

அம்மனும் அப்பனும் இணைந்திருக்கும் அர்த்த நாரீஸ்வரர் என்பதன் பொருள் அர்த்த என்றால் பாதி என்பது பொருள். நரன் என்றால் ஆண் என் றும், நாரி என்றால் பெண் என்றும் கொள்ள வேண்டும். ஈஸ்வரன் என்பது சகல செளபாக்கியங்களையும் கொண்ட முதன்மையானவன். அவனது உடலை பாதி பெண்ணுக்கு தந்து மங்கை பாகன் என்று அழைக்கப்படுபவன் என்றும் சொல்லலாம்.

சிவன் தன் சக்தியோடு பிரிக்க இயலாத ஆற்றலாக மாறி நமக்காக அருளும் தோற்றமே அம்மையப்பர் உருவம். நாம் வணங்கும் லிங்கத்தின் தோற்றத்தையும் ஆண்பாதி, பெண் பாதி என்று சொல்வதுண்டு. உலகில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளும் ஆண், பெண் என்னும் கூட்டுக்குள் ஒன்றாக இயங்குகிறது. அதாவது இந்த அகிலமானது ஆண்,பெண் இருவரும் இணைந்த உலகமே என்ற தத்துவத்தையே விளக்குகிறது.ஆண் இல்லாமல் பெண் இல்லை என்பதைப் போலவே பெண் இல்லாமல் ஆண் இல்லை என்பதையும் உணர்த்துகிறது. அதனால் தான் அம்மையப்பர் வடிவம் போக வடிவம் என்றும் அழைக்கப்படுகிறது. வேயுறு தோளி பங்கன் என்று ஞான சம்பந்தரும், மலைமாது ஒரு பாகா என்று மாணிக்கவா சகரும் உருகி பாடியிருக்கிறார்கள்.

அதனால் மதுரையில் மீனாட்சிக்கே முதலிடம் என்று சொன்னாலும் அவள் சிவனருளையே வழங்கிக்கொண்டிருக்கிறாள். சிதம்பரத்தில் சிவன ருள் பரிபூரணமாக இருந்தாலும் அவர் சிவகாமியின் வழியிலேயே அருள் தர முடியும். நமக்கு வேண்டியது அருள் தான். அதை இருவருமே குறையின்றி அளிப்பதால் இருவரும் ஒருவரே. அவர்கள் இருவரும் சமமானவரே.

மீனாட்சி ஆட்சியாக இருந்தாலும் சிதம்பர ஆட்சியாக இருந்தாலும் ஒருவரின்றி மற்றொருவரால் தனித்து இயங்க முடியாது என்பதே உண்மை தான். இறைவனுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் பொருந்தும்.


newstm.in

newstm.in

Next Story
Share it