Logo

காரைக்கால் அம்மையார் -63 நாயன்மார்கள்

63 நாயன்மார்களின் மூன்று நாயன்மார்கள் பெண்கள் ஆவார்கள். அவர்களில் மூத்தவர் காரைக்காலம்மையார். இவருடைய இயற் பெயர்...
 | 

காரைக்கால் அம்மையார் -63 நாயன்மார்கள்

63 நாயன்மார்களின் மூன்று நாயன்மார்கள் பெண்கள் ஆவார்கள்.அவர்களில் மூத்த பெண் நாயன்மார் காரைக்காலம்மையார். இவருடைய இயற் பெயர் புனிதவதி. கண்ணப்ப நாயனார், கழற்றறிவார் நாயனார் போன்று காரைக்காலம்மையார் பற்றியும் ஒரு கட்டுரையில் அடக்க இயலாது என்ப தால் இவரைப்பற்றியும் தொடர்ச்சியாக காண்போம். 

சோழமண்டலம் காரைக்காலில் வைசியக்குலத்தைச் சேர்ந்த தனதத்தன் என்பவனுக்கு மகளாக பிறந்தார். அழகும் அறிவும் அன்பும் நிறைந்த குணவதியான புனிதவதி சிறுவயதிலேயே சிவபெருமான் மீது பக்தியும் அன்பும் செலுத்தினாள். சிவாலயங்களில் பூஜைக்கு உதவிசெய்வது, கோலமிடுவது வயதுக்கே உரிய பணிகள் செய்வது என்று இருந்தாள் சிறுகுழந்தை புனிதவதி வீட்டுக்கு வரும் சிவனடியார்களுக்கும் அமுது பரி மாறி மகிழ்வுற்றாள்.

புனிதவதி மங்கை ஆனதும் அவளுக்கு திருமணம் செய்துவைக்க நினைத்தார் தனதத்தன்.நாகப்பட்டினத்தைச் சேர்ந்த நிதிபதி மகன் பரமதத்த னுக்கு தன் மகளை மணமுடித்து பெற்ற மகள் ஒன்று என்பதால் பெரும் செல்வம் அளித்து தன் கண்பார்வையிலேயே வைத்துக்கொண்டார் புனித வதியின் தந்தை.பரமதத்தனும் குறைசொல்ல இயலாத அளவுக்கு மனைவியுடன் மகிழ்வாகவே இல்லறம் நடத்தி பொருள் ஈட்டினார்.

திருமணம் முடிந்தாலும் புனிதவதி தன்னுடைய  சிவபக்தியையும் சிவனடியார்களை வணங்குவதையும் பெரும் பேறாக எண்ணி வாழ்ந்திருந் தார். அவரது கணவனும் மனைவியின் பக்திக்கு தடை அளிக்கவில்லை. வீடு தேடி வரும் அடியார்களுக்கு பொருளும், ஆடைகளும் தானமாக அளித்துவந்தார் புனிதவதி.

ஒருநாள் பரமதத்தன் வணிகம் செய்யும் போது அறிமுகமான நபர் அவரிடம் இரண்டு மாம்பழங்களைக் கொடுத்து சுவையாக இருக்கும். சாப்பிட்டு பிறகு சொல்லுங்கள் என்றார். பரமதத்தன் அந்தப் பழங்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தான். அச்சமயம் புனிதவதியின் வீட்டுக்கு அடியார் ஒருவர் அமுது வேண்டிவந்தார். வீட்டில் இருக்கும் உணவோடு கறிசமைக்க நேரமில்லாமையால் மாங்கனியை கொண்டு வந்து அடியார்களுக்கு  இட்டு மகிழ்ந்தார் புனிதவதி அம்மையார். சுவையான அமுது என்று வாழ்த்தி சென்றார் சிவனடியார்.

அன்று உணவுக்கு வீட்டுக்கு வந்த பரமதத்தனுக்கு எஞ்சிய  ஒரு மாம்பழத்தை வைத்து அமுது பரிமாறினார் புனிதவதி. மாம்பழங்களின் ருசியால் மகிழ்ந்த பரமதத்தன் இன்னும் ஒரு கனி இருந்ததே அதையும் கொண்டு வா என்றான்.புனிதவதியார் அச்சம் கொண்டு உள்ளே வந்து அடியார்க ளுக்கு உற்ற நேரத்தில் உதவும் சிவபெருமானின் திருவடிகளை தொழுதார். நான் என் செய்வேன் என்று அழுதார்.

எம்பெருமானின் கருணையால் கனி ஒன்று அவர் கையில் வந்து விழுந்தது. மகிழ்ந்த புனிதவதியார் அக்கனியை கணவருக்கு  பரிமாறினார். அதை உண்ட பரமதத்தனின் முகம் மாறியது. மூவுலகிலும் கிடைக்காத அரிய சுவையுடைய இந்தப் பழம் ஏது? இது நான் கொடுத்து அனுப்பிய தல்லவே. இது எங்கிருந்து கிடைத்தது என்று கேட்டான். என்ன பதில் சொல்வது என்று புரியாமல் அமைதிகாத்தார் புனிதவதியார். அதன்பிறகு .. தொடர்ச்சியில் பார்க்கலாம்.   

 

Newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP