Logo

பூஜை செய்வதில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!

பூஜை புனஸ்காரங்கள் பற்றிய தெளிவு நம்மை விட நமக்கு முந்திய தலைமுறைகளான நமது தாய் தந்தையர் நன்றாக தெரிந்து வைத்திருந்தனர். அடுத்து வந்த நமது தலைமுறையினருக்கு ஓரளவிற்கு தெரியும். ஆனால் நமக்கு அடுத்த வரப்போகும் சந்ததியினருக்கு எந்த அளவிற்கு தெரியும்? காலண்டரைப் பார்த்து கிழமை, திதி, நட்சத்திரம் ஆகியவற்றை தெரிந்துக் கொள்ளலாம். ஆனால்...
 | 

பூஜை செய்வதில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!

பூஜை புனஸ்காரங்கள் பற்றிய தெளிவு  நம்மை விட நமக்கு முந்திய தலைமுறைகளான நமது தாய் தந்தையர் நன்றாக தெரிந்து வைத்திருந்தனர். அடுத்து வந்த நமது தலைமுறையினருக்கு ஓரளவிற்கு தெரியும். ஆனால் நமக்கு அடுத்த வரப்போகும் சந்ததியினருக்கு எந்த அளவிற்கு தெரியும்?

காலண்டரைப் பார்த்து கிழமை, திதி, நட்சத்திரம் ஆகியவற்றை தெரிந்துக் கொள்ளலாம். ஆனால், நல்ல நாள்கிழமைகள் வரக்கூடிய ருது பற்றி அறிந்திருக்க மாட்டோம். பூஜைக்கு வைக்கப்படும் நைவேத்தியப் பொருட்களின் பெயர்கள் முழுவதும் தெரிந்திருக்காது.

இன்றையப் பதிவில் நிவேதனப் பெயர்களையும், பூஜைகள் செய்யும் பொழுது மாதங்களைச் சொல்ல வேண்டிய முறை பற்றியும் தெரிந்துக் கொள்ளலாம்.

1. கதலீபலம் – வாழைப்பழம்

2. பீஜாபூரபலம் – கொய்யாப்பழம்

3. வேத்ர பலம் – பெரப்பம் பழம்

4. பதரி பலம் – எலந்தைப் பழம்

5. கர்ஜுர பலம் – பேரிச்சம் பழம்

6. ஜம்பூ பலம் – நாவல் பழம்

7. கபித்த பலம் – விளாம் பழம்

8. த்ராஷா பலம் – திராட்சைப் பழம்

9. சூ பழம் – மாம்பழம்

10. மாதுஸங்கபழம் – மாதுளம் பழம்

11. நாரங்கபலம் – நார்த்தம்பழம் அல்லது சாத்துக்குடி

12. பனஸ பலம் – பலாப் பழம்

13. உர்வாருகம் – வெள்ளரிக்காய்

14. ஜம்பீர பலம் – எலுமிச்சம் பழம்

15. இக்ஷகண்டம் – கரும்பு

16. சணகம் – கடலை

17. ப்ருதுகம் – அவல்

18. ஸர்க்கரா – சர்க்கரை

19. ததி – தயிர்

20. குடோபஹாரம் – வெல்லம்

21. காஷ்மீர பலம் - ஆப்பிள்

22. அமிருதம் – தீர்த்தம்

23. நாரிகேளம் – தேங்காய்

24. ஸால்யன்னம் – சம்பா அன்னம்

25. குளா பூபம் – அதிரசம், அப்பம்

26. தத்யன்னம் – தயிர் சாதம்

27. திந்திரியன்னம் – புளியோதரை

28. ஸர்கரான்னம் – சர்க்கரை பொங்கல்

29. மாஷா பூபம் – வடை

30. ரஸகண்டம் – கற்கண்டு

31. மோதகம் – கொழுக்கட்டை

32. திலான்னம் – எள்ளு சாதம்

33. ஆஜ்யோபகாரம் – நெய்

34. லட்டூகம் – லட்டு

35. சித்ரான்னம் – பலவகை கலந்த சாதம்

36. நாரிகேளகண்டத்வயம் – இரண்டாக உடைத்த தேங்காய்

37. க்ருதகுள பாயஸம் – வெல்லம் போட்ட பாயஸம்

38. கோக்ஷீரம் – பசும் பால்

ருதுக்கள் பற்றி தெரிந்துக் கொள்வோம்

சித்திரை, வைகாசி – வஸந்த ருது

ஆனி, ஆடி – க்ரீஷ்ம ருது

ஆவணி, புரட்டாசி – வர்ஷ ருது

ஐப்பசி, கார்த்திகை – சரத் ருது

மார்கழி, தை – ஹேமந்த ருது

மாசி, பங்குனி – சிசிர ருது

பூஜையின் போது கிழமைகளைச் சொல்லும் முறை

ஞாயிறு – பானு வாஸர

திங்கள் – இந்து வாஸர

செவ்வாய் – பவும வாஸர

புதன் – சவும்ய வாஸர

வியாழன் – குரு வாஸர

வெள்ளி – ப்ருகு வாஸர

சனி – ஸ்திர வாஸர

பூஜைகள் செய்யும் பொழுது, மாதங்களைச் சொல்லவேண்டிய முறை பற்றி தெரிந்துக் கொள்வோம்

சித்திரை – மேஷ மாஸே

வைகாசி – ரிஷப மாஸே

ஆனி – மிதுன மாஸே

ஆடி – கடக மாஸே

ஆவணி – ஸிம்ம மாஸே

புரட்டாசி – கன்யா மாஸே

ஐப்பசி – துலா மாஸே

கார்த்திகை – வ்ருச்சிக மாஸே

மார்கழி – தனுர் மாஸே

தை – மகர மாஸே

மாசி – கும்ப மாஸே

பங்குனி – மீன மாஸே

பூஜை, சடங்கு சம்பிரதாயங்களை தெரியாமல், பொருள் புரியாமல் செய்வதை விட, தரிந்துக் கொண்டு செய்யும் போது அதன் பழங்கள் பன்மடங்காகும். மேலும் ஆத்ம திருப்தியையும் கொடுக்கும்.

அன்பே சிவம்: அறிவே துணை 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP