Logo

பேராசை குணம் மனிதனுக்கே சொந்தம்...

நாரதர் கலகத்தை தொடங்கி விட்டார். இதிலென் னய்யா உமக்கு சந்தேகம். வேண்டுமானால் உன்னை வைத்து பரிசோதிக்கிறேன் உமக்கு சம்மதமா என்றார். நாரதருக்கு தவளை தன் வாயால் கெடும் என்பது போல் நன்றாகவே மாட்டிக் கொண்டோம்...
 | 

பேராசை குணம் மனிதனுக்கே சொந்தம்...

ஆலமரத்தடியில் சிவனே என்று இருக்கும் பிள்ளையாரிடம் வம்பு வளர்க்க வந்தார் நாரதர். இருக்கும் இடத்திக் கச்சிதமாய் பொருந்திக் கொள்கி றீரே எப்படி பிள்ளையாரே என்றார் நாரதர். இன்று வம்பு பேச யாரும் ஆள் இல்லை போல் இருக்கே அதான் என்னிடம் வந்துவிட்டீர்களாக்கும் என் றார் பிள்ளையார். என்ன கணேசா எல்லோரும் தான் அப்படி சொல்கிறார்கள் நீயும் என்னை அப்படி நினைக்கலாமா என்றார் நாரதர் நமுட்டு சிரிப்புடன். சிறிது நேரம் இருவரும் அமர்ந்து கதை பேசியபடி இருந்தார்கள். அப்படியே சுற்றி சுற்றி வந்து பேச்சு மனிதர்கள் பக்கம் திரும்பியது.. 

மனிதர்கள் மிகவும் பேராசைக்காரர்கள் இல்லையா என்றபடி நாரதர் கலகத்தை தொடங்கி விட்டார். இதிலென்னய்யா உமக்கு சந்தேகம். வேண்டு மானால் உன்னை வைத்து பரிசோதிக்கிறேன் உமக்கு சம்மதமா என்றார். நாரதருக்கு தவளை தன் வாயால் கெடும் என்பது போல் நன்றாகவே மாட்டிக் கொண்டோம் என்று புரிந்தது. கேள்வியைக் கேட்டாயல்லவா. நீதான் பட்டுகொள்ள வேண்டும் என்று நினைத்தார் பிள்ளையார்.

சமயம் பார்த்து ஒருவன் அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தான். அவன் மிகப்பெரிய பேராசைக்காரன் என்பது பிள்ளையாருக்கு தெரியும். தன் பக்தன் ஒருவனை அனுதினமும் அவன் ஏமாற்றுவது  பிள்ளையாருக்கு தெரியும். அவனுக்கு தகுந்த பாடம் கற்பிக்க சமயம் பார்த்திருந்தார். நாரத ருக்கும் சரியான ஆள் இவன் தான் என்பதை உணர்ந்தவர் நாரதரே நாளையே நம் பாடத்தை தொடங்கலாம் என்றார்.நாரதரும் சரி என்றார்.

மறுநாள் பிள்ளையாரின் ஏமாளி பக்தன்வந்து வழக்கம் போல் வழிபட்டு தொழிலுக்கு கிளம்பினார். தள்ளாத வயதிலும் வெண்ணெய் வியாபாம் செய்து வந்த அந்த முதியவரை அந்த பேராசைக்காரன்  நன்றாக ஏமாற்றி வந்ததை பிள்ளையார் அறிந்திருந்தார்.  நாரதரின் காதில் ரகசியம் ஓதி அவரை இளைஞனாக மாற்றினார்.

இளைஞனான நாரதர் வயோதிக பக்தன் முன் சென்று ஐயா என் நேர்த்திக்கடனை நீங்கள் தான் நிறைவேற்ற வேண்டும். பிள்ளையாரிடம் கோரிக் கை ஒன்று வைத்திருந்தேன். நன்மையாக முடிந்தது. அதன் பொருட்டு நான் வயதானவர்களுக்கு உதவி செய்வதாக வழிபட்டிருக்கிறேன். இன்று ஒருநாள் நீங்கள் இங்கேயே இருங்கள். நான் போய் வெண்ணையை விற்று வருகிறேன் என்று கூறினார்.

பிள்ளையாரின் முன்னிலையில் வந்து கேட்கிறாய். இல்லை என்று சொல்ல மனம் விரும்பவில்லை என்று சம்மதித்தார். இளைஞன் வேடமிட்ட நாரதர் வெண்ணெய் டின்னை எடுத்துகொண்டு அந்த பேராசைக்காரனிடம் சென்றார். அவனுக்கென்று தனியாக வைத்திருந்த வெண்ணெய் டின் னைக் கொடுத்தார். எங்கே வழக்கமாக வருபரைக் காணவில்லை என்றான்.அவர் எல்லாவற்றையும்  சரிபார்த்து கொடுத்தார். வேண்டுமானால் நீங்களே பாருங்கள் என்றான். அதை வாங்கி வழக்கம் போல் எடைத் தட்டில் வைத்தான். வெண்ணெய் எடையும் 100 கிராமுக்கு மேலான அள வில் குறைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றான். 

பேராசைக்காரனுக்கு ஆத்திரம்.எடை போடாமல் வாங்குகிறேன் என்று ஏமாற்றுகிறாயா? இப்படியெல்லாம் ஏமாற்றகாமா? இதுவரை என்னை நன்றாக ஏமாற்றியிருக்கிறாய். பஞ்சாயத்தில் நிறுத்துகிறேன் என்றார். எல்லோரையும் கலங்க வைத்த நாரதருக்கு கலக்கம் அதிகமானது. ஊர் பெரியவர்கள் முன்னிலையில் வழக்கு தொடங்கியது. 

பேராசைக்காரன், தினப்படி நான் இவரிடம் வெண்ணெய் வாங்குகிறேன். இன்று தான் எடை போட்டு பார்த்தேன். 100 கிராமுக்கும் குறைவாக இருந் தது. இப்படித்தான் என்னை தினம் ஏமாற்றி வந்திருக்கிறான். இவனுக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் என்றான். உடனே இளைஞனாக இருந்த நாரதர்  நிச்சயம் இருக்காது. நாங்கள் அப்படி செய்யவில்லை என்றார்.

சரி அப்படியானால் நீங்கள் எப்படி எடைபோட்டீர்கள் என்றார்கள். எனது தாத்தாவிடம் இருந்த வெண்ணெய்  எடை போடும் கருவி உடைந்துவிட் டது. அதனால் அவரிடம்  வாங்கிய ரொட்டி  துண்டங்களை வைத்து சரியான அளவில் வெண்ணையை வைத்தோம். சொல்லப்போனால் அவர் வாடிக்கையாக வாங்குவதால்  இன்னும் சிறிது அதிகமாக வெண்ணெய் வைத்து கொடுத்தோம் என்றார்.

இப்போது புகார் செய்த பேராசைக்காரனே மாட்டிக்கொண்டான். ஊர் பெரியவர்கள் அவனுக்கு தகுந்த பாடம் கற்பித்தார்கள். நாரதருக்கும் மனித னின் பேராசை புரிந்தது போல் இருந்தது.  இப்போது உங்களுக்கும் புரிந்திருக்கும் தானே...

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP